சிவாஜிக்கு பிடிக்காத பாட்டு.. எம்.ஜி.ஆருக்கு பிடித்த பாட்டு!.. அடம்பிடித்து வைத்த எம்.எஸ்.வி..

by சிவா |   ( Updated:2023-06-27 11:53:31  )
mgr sivaji
X

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு ஜாம்பாவன்களுக்கும் அவர்கள் நடித்த படங்களுக்கு இசையமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.விஸ்வநாதனை தவிர வேறு இசையமைப்பாளரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலையில்தான் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர்.

அவர்கள் இருவருக்கும் சோகம் தத்துவம், காதல் என பல சூழ்நிலைகளுக்கும் பல நூறு ஹிட் பாடல்களை எம்.எஸ்.வி கொடுத்திருக்கிறார். எம்.ஜி.ஆரும், சிவாஜியும் அவர்கள் நடிக்கும் படங்களுக்கான பாடல் மெட்டை அவர்கள்தான் தேர்வு செய்வார்கள்.

சிவாஜி, ஜெயலலிதா ஆகியோர் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் ‘பட்டிக்காடா பட்டணமா’. இப்படத்திற்கான பாடலுக்காக ஒரு மெட்டை சிவாஜியிடம் எம்.எஸ்.விஸ்வநாதன் வாசித்து காட்டினார். ஆனால்,அது சிவாஜிக்கு பிடிக்கவில்லை. இந்த டியூன் வேண்டாம் என சொன்னார். ஆனால்,எம்.எஸ்.விஸ்வநாதனோ இது அருமையான டியூன். கண்டிப்பாக பெரிய ஹிட் அடிக்கும் என்னை நம்புங்கள் என்றார். ஆனால் சிவாஜி பிடிவாதமாக மறுத்தார். இந்த பாட்டை கண்டிப்பாக படத்தில் வைப்பேன் என எம்.எஸ்.விவியும் அடம்பிடித்தார். இது சிவாஜிக்கே கோபத்தை ஏற்படுத்தியது.

pattikada

சிவாஜியின் பேச்சை கேட்கமால் அந்த மெட்டிற்கே பாடலை உருவாக்கினார் எம்.எஸ்.வி. அதுதான் ‘அடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என் நெஞ்ச குலுங்குதடி’ பாடலாகும். அவர் கூறியது போலவே படம் வெளியான போது அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இன்னும் சொல்லப்போனால் அந்த பாடலே அந்த படத்திற்கு பெரிய விளம்பரமாக அமைந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரே எம்.எஸ்.வியிடம் ‘இதே போல் எனக்கும் ஒரு பாடல் போட்டு கொடு’ என கேட்டாராம்.

Next Story