இவர் இந்த பாட்டை பாடக்கூடாது என அடம்பிடித்த சிவாஜி!.. டி.எம்.எஸ் உருவான கதை இதுதான்!..

by சிவா |
sivaji
X

நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பல நூறு பாடல்களை பாடியவர் டி.எம்.சவுந்தரராஜன். நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் திரையுலகத்திற்கு வந்தவரை உங்கள் குரலை மட்டும் கொடுங்கள் என சினிமா உலகம் அவரை பாடகராக மாற்றியது. ஆனாலும் துவக்கத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு வேறு மாதிரியும் என குரலில் வித்தியாசம் காட்டி பாடல்களை பாடியவர் இவர். பல பாடகர்கள் அவர்களுக்கு பாடியிருந்தாலும் டி.எம்.எஸ் குரல் மட்டுமே அவர்கள் இருவருக்கும் மிகவும் பொருந்திப்போனது. காதல், பக்தி, சோகம், தத்துவம் என பல சூழ்நிலைகளுக்கும் டி.எம்.எஸ் பாடல்களை பாடியிருக்கிறார்.

இதையும் படிங்க: கலைஞருக்கும் கண்ணதாசனுக்கும் எழுந்த மோதல்!.. படத்திலிருந்து விலகிய சிவாஜி!…

சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். மேலும், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது திறமையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் திரைத்துறையில் தொடர்ந்து நீடிக்க முடியும். 1954ம் வருடம் சிவாஜியின் நடிப்பில் உருவான திரைப்படம்தான் தூக்கு தூக்கி. இந்த படத்தில் லலிதா, பத்மினி, ராகினி என பலரும் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார். இந்த படத்திற்கு பாடல்களை பாட திருச்சி லோகநாதனை படக்குழு அணுகியது. ஆனால், அவர் அதிக சம்பளம் கேட்டிருக்கிறார். எனவே, அப்போது திரைத்துறையில் வளர்ந்துகொண்டிருந்த டி.எம்.சவுந்தரராஜனை பாடவைப்போம் என இயக்குனர் முடிவு செய்தார்.

இதையும் படிங்க: அந்தப் படத்துல நடிச்சதுக்கு மக்கள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வேதனையில் சிவாஜி.. இதெல்லாம் நடந்திருக்கா

ஆனால், ‘எனக்கு லோகநாதன்தான் பாடி வருகிறார். அவரே பாடட்டும். சவுந்தரராஜன் வேண்டாம்’ என சிவாஜி சொல்லிவிட்டார். அதன்பின் மருதகாசி சிவாஜியை சம்மதிக்க வைக்க அந்த படத்தில் டிம்.எம்.எஸ் பாடல்களை பாடினார். ஒரு பாட்டு பாட வாய்ப்பு கிடைக்குமா என காத்திருந்த டி.எம்.எஸ் ‘தூக்கு தூக்கி’ படத்தில் 8 பாடல்களை பாடினார்.

அவர் பாடியது சிவாஜிக்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது. சிவாஜிக்கும் அவரின் குரல் பிடித்துப்போனது. எனவே, தனது படங்களில் அவரை தொடர்ந்து பாட வைத்தார். இப்படித்தான் டி.எம்.எஸ் சினிமா உலகில் வளர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story