பராசக்தி படத்தில் வேற ஹீரோ!..அடம் பிடித்த ஏவிஎம்…சிவாஜி மாறிய சுவாரஸ்ய பின்னணி..

by Akhilan |   ( Updated:2022-10-11 12:43:10  )
பராசக்தி
X

பராசக்தி

சிவாஜி என்றாலே பலருக்கு முதலில் நியாபகத்துக்கு வரும் திரைப்படம் பராசக்தி தான். ஆனால் அவருக்கு அப்படத்தில் அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல போராட்டத்திற்கு பிறகே அப்படம் கை கூடியது.

ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியாரும், பி.ஏ.பெருமாள் இணைந்து ஒரு படத்தினை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. அப்போது, பிரபலமாக இருந்த பராசக்தி நாடகத்தினை படமாக்கலாம் எனத் திட்டமிட்டனர். இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு இயக்க மு.கருணாநிதி வசனம் எழுதினார்.

அந்த சமயத்தில், இந்த நாடகத்தில் பிரபலமாக நடித்து கொண்டிருந்த சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் என்பது பி.ஏ.பெருமாளின் எண்ணமாக இருந்தது. ஆனால்,மெய்யப்ப செட்டியாரோ அச்சமயம் சினிமாவில் புகழ்பெற்று இருந்த கே.ஆர்.ராமசாமி தான் என திட்டவட்டமாக இருந்தார்.

இருந்தும், மெய்யப்ப செட்டியாரை அழைத்து சென்று பெருமாள் முதலியார் சிவாஜி நடித்த நாடகத்தினை பார்க்க வைத்தார். இருந்தும், அவர் மனது மாறவில்லை. ராமசாமி தான் நடிக்கணும் என்றார். அந்த பையன் நாடகத்தில் நடிக்கிறான். சினிமாவில் எப்படி நடிக்க முடியும். இது நாம் செய்யும் முதல் படம். இப்படம் வசூல் செய்யவில்லை என்றால் என்ன செய்வது? என்றாராம்.

இத்துணை சொல்லிக்கூட பெருமாள் முதலியார் சிவாஜி தான் வேண்டும் என அடம்பிடித்தார். இவரை ஒன்னும் செய்ய முடியாது. பட்டு திருந்தட்டும் என ஏவிஎம் நிறுவனம் பராசக்தி படத்திற்கு சிவாஜியையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரச்சனை அங்கு முடிந்து விடவில்லை. சிவாஜியை கதாநாயகனாக மாற்ற டெஸ்ட் ஷூட் எடுக்கப்பட்டது. இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, முதல் வார்த்தையாக சக்ஸஸ் எனச் சொல்ல வைத்தனர்.

இதையும் படிங்க: பராசக்தி படத்திற்கு தடை.. பணம் வாங்காமல் நடித்து கொடுத்த சிவாஜி..?

இந்த காட்சிகள் எல்லாம் தயாரிப்பாளர்களான மெய்யப்ப செட்டியார் மற்றும் பெருமாள் முதலியாருக்கு போட்டு காட்டப்பட்டது. ஆனால், அங்கும் சிவாஜியை விதி துறத்தியது. அப்போது ஏ.வி. எம்மில் சவுண்ட் இஞ்சினியராக இருந்த ஜீவா சிவாஜியை நடிக்க வேண்டாம் என்றார். இருந்தும் தயாரிப்பாளர்களுக்கு அவரின் நடிப்பு பூரண திருப்தியை தான் கொடுத்தது.

இருந்தும் மெய்யப்ப செட்டியார் ஒரு 5000 அடி எடுத்து பார்ப்போம். பின்னர் யோசிப்போம் எனக் கூறி சென்றுவிட்டாராம். சரி இனி படம் நடக்கும் என எதிர்பார்த்தால் மீண்டும் ஒரு பிரச்சனை துவங்கியது. படத் தயாரிப்பாளரான பெருமாள் முதலியாரின் மாமனாரே இவரால் சினிமாவுக்கு ஒத்து வர மாட்டார். இவரை மாற்றுங்கள் எனச் சண்டைக்கு நின்றார். இவர்கள் பேச்சை கேட்டு மாற்றம் நிகழ்ந்து விடுமோ என இயக்குனர்கள் பயந்தனர்.

பாரசக்தி

அவர்கள் அண்ணாவிடம் சென்று இந்த பிரச்சனையை கூறினர். இப்போது பராசக்தி படத்தினை மீண்டும் போட்டு பார்த்தனர். இங்கும் மெய்யப்ப செட்டியாரிடம் உதவி இயக்குனராக இருந்த ராமன் ஹீரோவை மாற்றுங்கள் எனக் கோரினார். இதில் ஒரு படி மேலேறி, மெய்யப்ப செட்டியாரோ வசனம் எல்லாம் சரி தான்.

ஆனால் இந்த நடிகர்களை பார்க்க முடியவில்லை என்றார். நாயகனை மாற்றலாம் என மீண்டும் பழைய இடத்துக்கே வந்தார். இத்தனை பிரச்சனைக்கும் பெருமாள் முதலியார் சிவாஜி தான் நாயகன் என்பதில் ஒரு துளி மாற்றம் கூட இல்லாமல் இருந்தார்.

இருந்தும், பெருமாள் முதலியாருக்காக சிவாஜியை வைத்தே படம் மொத்தமும் எடுத்து முடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அப்புறமென்ன, படம் வசூலில் சாதனை படைத்தது. பிறிதொரு நாளில், தனது சுயசரிதையில் ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் இப்படி எழுதி இருந்தார். சிவாஜி விஷயத்தில் தனது கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது எனக் குறிப்பிட்டார்.

Next Story