தமிழ் சினிமா துவங்கிய காலத்திலிருந்தே நடிகர்கள் தங்களுக்கு என ஒரு தனி இடத்தை பிடித்து தங்களது ரசிகப்பெருமக்களை மகிழ்வித்தும், தங்களை வளர்த்து அதன் மூலம் சமூகத்தில் பெரிய பிம்பங்களாக காட்டிவரும் நிலை தொடரத்தான் செய்கிறது. இன்று எளிதில் சினிமாவில் நுழைந்து விடலாம் என்கின்ற நிலை நிலவி வந்தாலும், முன்னொரு காலத்தில் திரைத்துறைக்கு வர மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து, அவற்றை எல்லாம் கடந்து வெற்றியை ருசி பார்த்தவர்கள் பலர்.
நாடகத்துறை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த நேரமும் உண்டு. அண்ணாதுரை, கருணாநிதி, எம்,ஜி.ஆர் போன்ற ஆளுமைகளுக்கு வித்து மேடை நாடகங்களே. நடிப்பின் பரிமாணம் இரண்டிலும் வேறு பட்டாலும் , கலைஞர்கள் சரியான விகிதாச்சாரத்தில் கொண்டு சேர்த்து இவ்விரண்டு துறைகளையும் பெருமைபடுத்தி வந்தனர்.
நாடகங்களில் நடித்து சினிமாத்துறைக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்பட்டு வருபவர் “நடிகர் திலகம்” என்ற அடைமொழியை கொண்டிருப்பவர் மறைந்த சிவாஜி கணேசன். இவர் ஏற்காத வேஷங்களே இல்லை என்றும் சொன்னால் அது மிகையாகாது.
“அலைகள் இல்லாத கடலும் உண்டு”, “நிறமில்லாத வானமும் உண்டு” என்று சொன்னால் கூட வராத ஆச்சர்யம், தனக்கு நடிக்க வரவில்லை அதனால் தான் பலமுறை வருந்தி அழுத்திருக்கிறேன் என சிவாஜி சொன்னதை கேட்டு வருகிறது.
சில காட்சிகளில் சரியாக் நடிக்க முடியவில்லையாம். அதனால் அவரை நடிகனாக ஏற்க மறுத்த பழைய கால நினைவுகளை சொல்லியிருந்திருக்கிறார். சிவாஜி இறுதிவரை தெய்வமாக பார்த்த தனது குருநாதரான “பெருமாள்” நிராகரிக்கப்படவிருந்த வாய்ப்புகளை போராடி அவருக்கு பெற்று கொடுத்திருக்கிறார்.
இவரைப்போல இயக்குனர்கள் கிருஷ்ணன், பஞ்சு இணையில், பஞ்சு தனக்கு அதிகமாக உற்சாகம் தந்து தன்னை மனதளவில் பலப்படுத்தினார், இவற்றை எல்லாம் பார்த்து ‘வருந்தாதே, இன்று உன்னை பார்த்து சிரிக்கும் கூட்டம் நாளை உன்னை தேடி வந்து உன் பின்னால் நிற்கும். அதுவரை பொறுமையாக உன் வேலையை பார்’ என்று சிவாஜி வருந்தும் நேரங்களில் எல்லாம் சொல்லிவந்தாராம்.
அவர் கூறியது பலிக்கவே அவருக்கு செலுத்தும் நன்றி கடனாக எங்கு பார்க்க நேர்ந்தாலும் சாஷ்டாங்கமாக காலில் விழுவதை பழக்கமாக வைத்திருந்ததாக தன்மையுடன் தனது முந்தைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் சிவாஜி கணேசன்.
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…
Vijay antony:…