சிவாஜியின் ரியல் பாசமலர் ஸ்டோரி தெரியுமா?!.. பாடகியிடம் அன்பு காட்டிய நடிகர் திலகம்!..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரைப்படங்களில் பல செண்டிமெண்ட் காட்சிகளில் நடித்திருப்பது எல்லோருக்கும் தெரியும். சிவாஜி படம் என்றாலே அழவைக்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்தே ரசிகர்கள் தியேட்டருக்கு போவார்கள். குறிப்பாக பெண்கள் சிவாஜியின் படத்தை அதிகம் ரசித்ததற்கு காரணம் அதுதான்.
அப்பா, மகன் என பல படங்களில் சிவாஜி நடித்திருந்தாலும் பாசமலர் படத்தில் தங்கை மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக அசத்தலான நடிப்பை கொடுத்திருப்பார். அதேபோல், சிவாஜியின் தங்கையாக சாவித்ரியும் அற்புதமான நடிப்பை வழங்கியிருந்தார். தமிழ் சினிமாவில் பல அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் படங்கள் வந்திருந்தாலும் அதற்கு விதைப்போட்டது பாசமலர் படம்தான்.
இதையும் படிங்க: இளையராஜா கொடுத்த வாய்ப்பு.. சிவாஜி போட்ட கண்டிஷன்!.. மலேசியா வாசுதேவன் நடிக்க வந்தது ஏன்?
அதேநேரம், நிஜவாழ்விலும் சிவாஜிக்கு இப்படி ஒரு பாசமலர் கதை உண்டு என்பது பலருக்கும் தெரியாது. 60களில் இந்தியில் பிரபல பாடகியாக இருந்தவர் லதா மங்கேஷ்கர். அப்போது பாலிவுட்டில் நடிக்கும் பிரபல பாடகிகளுக்கெல்லாம் குரல் கொடுத்தவர் இவர்தான். அதாவது தமிழில் பி.சுசிலா போல ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் இருந்தார்.
அப்போதெல்லாம் பாடல்களை ஒலிப்பதிவு செய்ய சென்னைக்குதான் வரவேண்டும். இங்கே நிறைய ரிக்கார்டிங் தியேட்டர்கள் இருந்தது. எனவே, ஹிந்தி பாடல்களை பாட லதா மங்கேஷ்கர் அடிக்கடி சென்னை வரவேண்டி இருந்தது. அப்படி வரும்போதெல்லாம் அவர் சிவாஜியை சந்தித்து பேசுவதுண்டு. அடிக்கடி சென்னை வருவதால் தங்குவதற்கு எனக்கு ஒரு நல்ல இடம் வேண்டும் என அவர் சொல்ல தனது அன்னை இல்லம் வீட்டிலேயே அவருக்கு ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுத்தார் சிவாஜி.
இதையும் படிங்க: அந்த விஷயத்துக்காக இரவில் சுவரேறி குதித்த சிவாஜி… பிரபல நடிகர் சொல்லும் சீக்ரெட்…
அன்று துவங்கிய உறவு இறுதிவரை சிவாஜியும், லதா மங்கேஷ்கரும் இறுதிவரை அண்ணன் - தங்கையாகவே வாழ்ந்தனர். தீபாவளி, பொங்கல் வந்தால் சிவாஜி மும்பையில் இருக்கும் லதா மங்கேஷ்கருக்கு சீர் அனுப்புவார். அதேபோல், லதாஜி எப்போது சென்னை வந்தாலும் சிவாஜிக்கும், அவரின் மகன்களுக்கும் பரிசு பொருட்களை வாங்கி வருவார்.
1987ல் பிரபு நடித்து உருவான ஆனந்த் என்கிற படத்தில் ஒரு பாடலையும் லதாஜி பாடியிருப்பார். எவ்வளவு வற்புறுத்தியும் அதற்காக அவர் பணம் வாங்கவில்லை. அது தவிர இளையராஜா இசையில் மீரா படத்தில் இடம் பெற்ற ‘ஓ பட்டர்பிளை’ மற்றும் ‘செண்பகமே செண்பகமே’ உள்ளிட்ட சில பாடல்களை லதாஜி பாடியிருக்கிறார்.