ஒன்பது முறை ஒன் மோர் கேட்ட இயக்குனர்... கடுப்பில் சிவாஜி எடுத்த முடிவு.... அதிர்ந்துப்போன படக்குழு
நடிப்பிற்கே பல்கலைக்கழகம் என்று பெயர் எடுத்தவர் சிவாஜி கணேசன். அவருக்கு இருந்த நடிப்பாற்றலை குறித்து ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் கச்சிதமாக பொருந்தி பின்னி பெடல் எடுப்பவர் சிவாஜி கணேசன். அப்படிப்பட்ட மாபெரும் ஜாம்பவானிடமே ஒரு இயக்குனர் 9 முறை ஒன்மோர் கேட்டிருக்கிறார். அவர் யார் என்பது குறித்தும் அந்த சம்பவத்தை குறித்தும் இப்போது பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கஸ்தூரி ராஜா. இவர் "என் ராசாவின் மனசுல", "தாய் மனசு" போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தனது மகனான தனுஷை "துள்ளுவதோ இளமை" திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர். தற்போது தனுஷ் உச்சத்தை தொட்ட நடிகராக இருக்கிறார் என்பது பலரும் அறிந்ததே.
கஸ்தூரி ராஜா, 1998 ஆம் ஆண்டு சிவாஜி கணேசனை வைத்து "என் ஆசை ராசாவே" என்று ஒரு திரைப்படத்தை இயக்கினார். இதில் சிவாஜி கணேசனுடன் ராதிகா, முரளி, ரோஜா, சுவலட்சுமி போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு காட்சி சரியாக வரவில்லை என்று ஒன்பது முறை டேக் போனதாம். உடனே சிவாஜி கணேசன், கஸ்தூரி ராஜாவை அருகில் அழைத்து, "ஏன் 9 டேக் போகுது. என்ன காரணம்?" என கேட்க, "சார் நீங்கதான் காரணம்" என கஸ்தூரி ராஜா கூறியிருக்கிறார்.
உடனே சிவாஜி கணேசனுக்கு கோபம் வந்துவிட்டதாம். கண் சிவந்தபடி, "என்னது நான் காரணமா? நான் என்னய்யா பண்ணேன்" என கூற அதற்கு கஸ்தூரி ராஜா, "சார் கொஞ்சம் ஓவர் நடிப்பா இருக்கு? கொஞ்சம் கம்மிப்பண்ணனும் சார்" என கூறியிருக்கிறார். அதற்கு சிவாஜி, "கம்மி பண்ணனுமா? என்ன நடிக்கிறதுன்னா அவ்வளவு ஈசியா? நீங்க அப்போ நடிச்சிக்காண்பிங்க" என கூறினாராம். அதற்கு கஸ்தூரி ராஜா, "சும்மா இருங்கண்ணே, உங்க முன்னாடி எப்படி நடிச்சிக்காண்பிக்கிறது?" என கேட்க, அதற்கு சிவாஜி, "இல்ல, நீங்க நடிச்சி காட்டுங்க" என கூறினாராம்.
வேறு வழியில்லாமல் கஸ்தூரி ராஜா அந்த காட்சியில் நடிச்சிக்காட்டினாராம். அதை பார்த்து சிவாஜி கணேசன், "ஓஹோ, இப்படித்தான் வேணுமா உங்களுக்கு" என கூறிவிட்டு கஸ்தூரி ராஜா நடித்துக்காட்டியது போலவே சிவாஜி கணேசன் நடித்தாராம். இதை பார்த்து இயக்குனர் ஆச்சரியமடைந்தாராம்.
இதையும் படிங்க: சுருளிராஜன் வாங்கிய முதல் 100 ரூபாய் சம்பளம்!.. அட மனுஷன் இப்படியெல்லாமா செய்வாரு!..