தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் ஈடு இணையற்ற நடிகராக கலைஞராக பார்க்கப்படுபவர் சிவாஜி கணேசன். சிவாஜி கணேசன் நடிகராக இருந்த சம காலத்தில் அவருக்கு இணையான நடிகர்கள் இந்திய சினிமாவிலேயே இல்லை என அவருடன் பணிப்புரிந்த பலரும் கூறியுள்ளனர்.
எந்த விதமான நடிப்பையும் மிக எளிதாக நடிப்பவர் சிவாஜி கணேசன். அவரது முதல் திரைப்படம் பராசக்தி என்றாலும் அதற்கு முன்பே தனது சிறு வயது முதலே நாடகத்தில் இருந்தவர் என்பதால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடியவர் சிவாஜி.
அதே போல சிவாஜியால் ஒரு நாள் கூட நடிக்காமல் இருக்க முடியாதாம். எதாவது ஒரு நாள் படப்பிடிப்பு இல்லை என்று கூறிவிட்டால் மிகவும் கவலையடைந்துவிடுவாராம். தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா தனது திரை அனுபவங்களை பகிரும்போது சிவாஜி குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்திருந்தார்.
காயச்சலிலும் வந்த சிவாஜி:
இயக்குனர் கஸ்தூரி ராஜா சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய திரைப்படம் என் ஆசை ராசாவே. இந்த படத்தில் நடிகர் முரளி கதாநாயகனாக நடித்திருப்பார். அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் சிவாஜி கணேசனுக்கு கடுமையான காய்ச்சல் வந்துவிட்டது.
ஆனால் மறுநாள் படப்பிடிப்பில் ஒரு பாடலை படமாக்க இருந்ததால் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாகிவிட்டது. சிவாஜியால் வர முடியாத சூழ்நிலை அவருக்கு 102 டிகிரியில் காய்ச்சல் அடித்தது. எனவே படப்பிடிப்பை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கஸ்தூரி ராஜாவிற்கு போன் செய்த சிவாஜி “படப்பிடிப்பை தள்ளி போட வேண்டாம்.
நான் வந்து நடிக்கிறேன். ஏனெனில் கடைசி நேரத்தில் படப்பிடிப்பை தள்ளி போட்டாலும் வேலையாட்களுக்கு சம்பளத்தை கொடுத்துதான் ஆக வேண்டும். அது தயாரிப்பாளருக்கு இழப்பை ஏற்படுத்தும்” என கூறிய சிவாஜி மறுநாள் கண் சிவக்க சிவக்க வந்து அந்த படத்தில் நடித்து கொடுத்தார் என அந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார் கஸ்தூரி ராஜா.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…