சௌகார் ஜானகியிடம் சவால் விட்ட நடிகர் திலகம்… ஐயராகவே மாறிப்போன சிவாஜி கணேசன்…

Published On: March 16, 2023
Sivaji Ganesan
---Advertisement---

1970 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “வியட்நாம் வீடு”. இத்திரைப்படத்தை பி.மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் “வியட்நாம் வீடு” என்ற நாடகத்தில் இருந்து படமாக்கப்பட்டதாகும்.

Vietnam Veedu
Vietnam Veedu

“வியட்நாம் வீடு” நாடகத்தை சுந்தரம் எழுதியிருந்தார். பின்னாளில் வியட்நாம் வீடு சுந்தரம் என அறியப்பட்டு மிகப்பிரபலமான கதாசிரியராக வலம் வந்தார் அவர். “வியட்நாம் வீடு” நாடகத்திலும் சிவாஜி கணேசனே நடித்திருந்தார். பிரெஸ்டிஜ் பத்மநாபன் ஐயர் என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார் சிவாஜி கணேசன்.

சிவாஜி விட்ட சவால்

இந்த நாடகத்தில் நடிப்பதற்கு சௌகார் ஜானகியிடம் சிவாஜி விட்ட சவால்தான் காரணமாம். சிவாஜி கணேசன், சௌகார் ஜானகியிடம் அப்படி என்ன சவால் விட்டார் என்பதை குறித்து இப்போது பார்க்கலாம்.

Uyarntha Manithan
Uyarntha Manithan

1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “உயர்ந்த மனிதன்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு நாள் சௌகார் ஜானகி, சிவாஜி கணேசனிடம் “மாலை நான் நாடகத்திற்கு போகவேண்டும்” என கூறியிருக்கிறார். அதற்கு சிவாஜி கணேசன், “ஓஹோ, எதிர்நீச்சல் நாடகத்துல பட்டு மாமி வேஷத்துல ஐயர் பாஷை பேசி நடிக்கப்போறீங்களா? நானும் இந்த ஐயர் பாஷையை கத்துக்கிட்டு மிக விரைவிலேயே ஒரு நாடகத்தில் நடிக்கிறேன்” என சௌகார் ஜானகியிடம் சவால் விட்டாராம்.

Vietnam Veedu
Vietnam Veedu

அந்த சவாலின்படிதான் சிவாஜி கணேசன், “வியட்நாம் வீடு” நாடகத்திலே பிரெஸ்டிஜ் பத்மநாபன் ஐயர் என்ற கதாப்பாத்திரத்தில் ஐயர் பாஷை பேசி நடித்திருக்கிறார். ஒரு உண்மையான ஐயர் போலவே ஐயர் பாஷை பேசி நடித்த சிவாஜி கணேசனை, பார்வையாளர்கள் பலரும், “ஒரு ஒரிஜினல் ஐயர் கூட இப்படி பேசமாட்டார். அந்தளவுக்கு துல்லியமாக ஐயர் பாஷை பேசி நடித்தார்” என பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆஸ்கர் வாங்குறதுக்கு ராஜமௌலி இவ்வளவு கோடி செலவழிச்சாரா?? என்னப்பா சொல்றீங்க?