சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்ஷன் என்ன தெரியுமா?...

நாடகங்கள் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை துவங்கியதாலோ என்னவோ தொழிலில் மிகவும் சின்சியராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திரையுலகில் இவர் அளவுக்கு தொழிலுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் கொடுத்த நடிகர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.
அவரை பொறுத்தவரை அவர் நடிக்கும் படத்தை தயாரிக்கும் முதலாளியே அவரின் கடவுள். அவருக்கு நடிப்பு சொல்லி கொடுத்த அவரின் குருவே தெய்வம். தனது குருவின் பெயரை சொல்லும்போதெல்லாம் ‘என் தெய்வம்’ என்றுதான் சொல்லுவார். அந்த அளவுக்கு குருபக்தி உடையவர்.
இதையும் படிங்க: சிவாஜி கணேசன் ஷூட்டிங் முன்னாடி இதை மறக்காம செஞ்சிடுவாராம்.. ஒருநாள் கூட மிஸ் பண்ணதே இல்லையாம்..!
அதேபோல், படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சொல்லும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மேக்கப்புடன் சிவாஜி தயாராக இருப்பார். அவருக்கு சினிமாதான் சுவாசம், உயிர், வாழ்க்கை எல்லாமே. அதனால்தான் நடிப்பை அவர் அவ்வளவு நேசித்தார். அவரை போல நடிக்கும் நடிகர் இதுவரை யாரும் பிறக்கவில்லை.
படப்பிடிப்பில் யாராலும் அவருடன் போட்டி போட முடியாது. நடிப்பு என வந்துவிட்டால் அவரை யாராலும் ஓவர்டேக் செய்யவும் முடியாது. ஆனால், அவருடனும் ஒரு நடிகர் போட்டி போட்ட சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி நடித்து 1973ம் வருடம் வெளியான திரைப்படம் ராஜராஜ சோழன்.
இதையும் படிங்க: முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!…
இது ஒரு சரித்திர திரைப்படம். எனவே, ராஜா வேடத்தில் நடிப்பதால் அதிக ஆபரணங்களும், மேக்கப்பும் போட்டு சிவாஜி நடிக்க வேண்டியிருந்தது. ஒருநாள் காலை 7 மணிக்கு சிவாஜிக்கு படப்பிடிப்பு. எனவே, 6.45 மணிக்கு சிவாஜி மேக்கப்புடன் வந்தார். அவர் அப்படி வந்துவிடுவார் என்பது அப்படத்தில் நடித்த சிவக்குமாருக்கும் தெரியும். அதனால், காலை 5 மணிக்கு வந்து மேக்கப் போட்டு 6 மணிக்கு சிவக்குமார் தயாராகி விட அவரை வைத்து இயக்குனர் ஏ.பி.நாகராஜன் சில காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த சிவாஜி சிவக்குமாரிடம் சிரித்துக்கொண்டே ‘ஏன்டா டேய்.. நான் டிரெய்ன்ல வந்தா.. நீ ஃபிளைட்ல வறியா?’ என்றாராம். அதற்கு சிரித்துகொண்டே பதில் சொன்ன சிவக்குமார் ‘நடிப்புலதான் உங்களோட போட்டி போட முடியல.. இந்த மாதிரி விஷயத்துல போட்டி போடுறேன்’ என சொல்ல சிவாஜியும் குலுங்கு குலுங்கி சிரித்தாராம்.
இதையும் படிங்க: என்னது இது சிவாஜி இயக்கிய படமா? ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த அந்த படம் எதுனு தெரியுமா?