எம்.ஜி.ஆருக்கு கிடைத்த தேசிய விருது... எந்த படத்துக்கு தெரியுமா? ஆனால், சிவாஜிக்கு ஏன் கிடைக்கவில்லை...
தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் எனப் பலராலும் பாராட்டப்பட்ட சிவாஜி கணேசனுக்கு ஒரு படத்துக்கு கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு அந்த காலத்தில் போட்டியாக இருந்த எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது கிடைத்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிப்புக்கே வாழ்ந்தவர் சிவாஜி கணேசன் தான். அவரின் முதல் படத்தில் இவரெல்லாம் நடிகரா என ஒவ்வொரு கலைஞர்களும் கூறிக்கொண்டே இருந்தனர். தயாரிப்பாளருக்கோ, இயக்குனருக்கோ கூட அவர் மீது நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்த படம் வெளியாகி அத்தனை பேர் அவர் மீது கொண்ட ஏமாற்றத்தை உடைத்தார். படம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்தது. தமிழ் சினிமாவின் சகாப்தத்துக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது சிவாஜி தான். அவரின் பாசமலர், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. ரசிகர்களிடம் பல வருடம் தாண்டியும் இன்றும் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் பல வாரங்கள் திரையரங்குகளில் ஓடிய இந்த படங்களுக்கு சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் பெரிய தேவராக அவர் நடித்த தேவர்மகன் படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதுவும் நடிகருக்கான விருது இல்லை. துணை நடிகருக்கான சிறப்பு விருது தான் அறிவித்தனர். இந்த தகவலை கேட்ட கமலே நீங்கள் அந்த விருதை வாங்க வேண்டாம். வாழ்நாள் சாதனையாளருக்கான தேசிய விருது கொடுக்கப்படும். அப்போ வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: எஸ்பிபி பாட மறுத்த பாடல்கள்… ஆனால் கிடைத்ததோ தேசிய விருது…கிளாசிக் ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
ஆனால் சிவாஜிக்கு போட்டியாக இருந்த எம்.ஜி.ஆருக்கு ரிக்ஷாக்காரன் படத்துக்கே தேசிய விருது கொடுக்கப்பட்டது. மசாலா படங்களை கொடுத்த எம்.ஜி.ஆருக்கு கொடுக்கப்பட்ட தேசிய விருது. கிளாசிக் படங்களை தமிழுக்கு கொடுத்த சிவாஜிக்கு கொடுக்கவில்லை என ரசிகர்களிடம் பேச்சுக்கள் இருக்கிறது. இது கண்டிப்பாக சிவாஜி போன்ற நடிகருக்கு இழைக்கப்பட்ட அநீதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.