‘பாசமலர்’ க்ளைமாக்ஸ் காட்சிக்கு முதல் நாள் இரவு.. சிவாஜி பட்ட வேதனை.. பதறிய தயாரிப்பாளர்!..
தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகராக திகழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெளிவந்தாலும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இன்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பவை பாரசக்தி, பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை குறிப்பிடலாம்.
பாரசக்தி அறிமுகம் படம் என்றாலும் நாடகத்தில் அனுபவம் இருந்ததால் முதல் படத்திலேயே மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பாசமலர் படத்தில் ஒரு அண்ணனின் பாசத்தை தத்ரூபமாக காட்டி மக்கள் நெஞ்சில் குடி பெயர்ந்தார். அதுவும் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பார்த்த ரசிகர்கள் பெருமக்களை அழ வைத்து தான் வீட்டிற்கு அனுப்பினார்.
இதையும் படிங்க : “பொழுது போகலைன்னு நடிக்க வந்த உதயநிதி”… தெனாவட்டாக வார்த்தையை விட்டு மாட்டிக்கொண்ட மூத்த பத்திரிக்கையாளர்…
அந்த அளவுக்கு நடிப்பின் மூலம் உணர்வுகளை கொண்டு வந்தார். அந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காக முதல் நாள் இரவு தூங்காமலேயே இருந்திருக்கிறார். ஏனெனில் க்ளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி இறப்பது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும். அதனால் பார்ப்பதற்கு மிகவும் சோர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த டெக்னிக்கை பயன்படுத்தியிருக்கிறார் சிவாஜி.
சும்மா எப்படி தூங்காமல் இருப்பது என்ற காரணத்தால் இரவு 10 மணி முதல் தொடர்ச்சியாக 4 படங்களை தன் வீட்டில் அமைத்திருக்கும் திரையரங்கில் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். தனியாக பார்க்க முடியாது என்ற காரணத்தால் கூடவே பாசமலர் படத்தின் தயாரிப்பாளரான மோகன் மற்றும் அவரது உதவியாளரையும் உடன் அழைத்துக் கொண்டு வந்தாராம் சிவாஜி.
இதையும் படிங்க: மிஷ்கின் எனக்கு செஞ்சது துரோகம்!.. என்னைக்கும் மறக்க மாட்டேன்!.. விஷால் காரசார பேட்டி!..
இவர் தான் தூங்க கூடாது என்பதற்கு படம் பார்க்கிறார் என்றால் நம்மளையும் தூங்கவிட மாட்டிக்கிறாரே என்று வந்த உதவியாளர் தப்பி ஓடி விட்டாராம். நேரம் ஆக ஆக மறு நாள் சூட்டிங்கிற்கு தேவையான தயார் படுத்தவேண்டும் என்று சொல்லி மோகனும் கிளம்பி விட்டாராம். படமும் முடிந்து விட்டது.
அதன் பின்னராவது சிவாஜி தூங்குவார் என்றால் வீட்டை சுற்றி ஜாக்கிங் செய்து கொண்டு வந்தாராம். காலை விடிந்ததும் சூட்டிங் கிளம்பி விட்டு காட்சியிலும் நடித்துவிட்டார். சூட்டிங் முடிந்த கையோடு தினத்தந்தி சார்பில் ஒரு விழா ஏற்பாடு செய்திருந்தார்களாம். அதையெல்லாம் முடித்துவிட்டு தான் சிவாஜி வீடு வந்து தூங்கினாராம்.