மயங்கி விழுந்த சிவாஜி கணேசனை தாங்கி பிடித்த பத்மினி!.. என்ன காரணம்ன்னு தெரிஞ்சா அசந்துப்போவீங்க…
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன், “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தில் மிக கம்பீரமாக நடித்திருந்தார். இதில் சிவாஜியின் நடிப்பை பற்றி நாம் தனியாக கூறத்தேவையில்லை. அந்த அளவுக்கு மிகவும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சிவாஜி. இதில் அவர் நடித்தார் என்று கூறுவது கூட அபத்தம். சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும்.
1959 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது மட்டுமல்லாது, காலத்தை தாண்டியும் பேசப்படும் திரைப்படமாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தை பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.
அதே போல் சர்வதேச அளவில், எகிப்து நாட்டின் கெய்ரோவில் ஆஃப்ரோ-ஏசியன் விருது வழங்கும் விழாவில் சிறந்த இசை, சிறந்த நடிப்பு, சிறந்த வெளிநாட்டு திரைப்படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இத்திரைப்படத்திற்கு விருது கிடைத்தது.
இதில் சிறந்த இசைக்கான விருதை இசையமைப்பாளர் ராமநாதன் பெற்றார். அதே போல் சிறந்த நடிப்பிற்கான விருதை சிவாஜி கணேசன் பெற்றார். அந்த விருது வழங்கும் விழாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
அதாவது சிறந்த நடிகருக்கான பிரிவில் சிவாஜி கணேசனின் பெயரை விழா கமிட்டியினர் கூறியவுடன் அந்த விருதை வாங்கச் செல்வதற்காக இருக்கையில் இருந்து எழுந்தாராம் சிவாஜி கணேசன். அப்போது எழுந்த கரகோசத்தால் அவருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்.
கண்கள் சொருகி குடை சாய அருகில் இருந்த பத்மினி சிவாஜியை தாங்கிக்கொண்டாராம். அதன் பின் தெளிந்த சிவாஜி, மேடையில் ஏறி அந்த விருதை வாங்கும்போது இன்னும் அதிகமான கரகோஷங்கள் எழுந்ததாம். அதாவது திரையில் வீரபாண்டிய கட்டபொம்மனாக சிவாஜியை பார்த்த பார்வையாளர்கள், இதில் நடித்த நடிகர் ஆறடி உயரத்தில் இருப்பார் என்று நினைத்தனராம். ஆனால் சிவாஜி கணேசனின் உருவத்தை பார்த்ததும் அசந்துப்போய்விட்டனராம். இவரா இவ்வளவு கம்பீரமாக நடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டுப்போனார்களாம். அதனால்தான் மிகுந்த உற்சாகமாக கைத்தட்டினார்களாம்.
இதையும் படிங்க: சென்னையில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை பார்க்கனும்ன்னா மும்பைக்கு மெசேஜ் அனுப்பனுமாம்!… ஒரே குழப்பமா இருக்கேப்பா??