சிவாஜிக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கம் இருக்கா?? என்ன இருந்தாலும் அவரும் ஒரு மனுஷன்தானே!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிப்பிற்கே பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராக திகழ்கிறார் சிவாஜி கணேசன். தமிழ் சினிமா வாழும் வரைக்கும் சிவாஜி கணேசனின் புகழ் இருந்துகொண்டே இருக்கும். அந்தளவிற்கு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்தவராக சிவாஜி கணேசன் திகழ்கிறார்.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம், நேயர் ஒருவர் சிவாஜி கணேசனை குறித்து ஒரு கேள்வியை கேட்டிருந்தார். அதாவது “சிவாஜி கணேசனிடம் பிடிக்காத குணம் எதாவது இருக்கிறதா?” என்பதுதான் அந்த கேள்வி. இந்த கேள்விக்கு ஒரு அதிர்ச்சியான பதிலை அளித்திருந்தார் சித்ரா லட்சுமணன். அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
“நடிகர் திலகம் சிவாஜி கணேசனை பொறுத்தவரை அவர் எப்போதாவது உற்சாகமான மனநிலையில் இருந்தார் என்றால் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார். அது மட்டும்தான் எனக்குப் பிடிக்காத விஷயம். ஆனால் அவர் அப்படி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினாலும் யாரை பார்த்து அவர் கெட்ட வார்த்தைகளை சொல்கிறாரோ, அவர்கள் சிவாஜியின் மீது ஆத்திரப்படவும் மாட்டார்கள்., அவர் மீது கோபப்படவும் மாட்டார்கள். ஏனென்றால் சிவாஜி கணேசன் சொல்கின்ற விதம் அப்படி இருக்கும்” என கூறியிருந்தார்.
சித்ரா லட்சுமணன் சிவாஜியுடன் மிக நெருங்கிப் பழகிய நபர். அவர் சிவாஜி கணேசனை வைத்து “வாழ்க்கை” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.