Cinema History
கடனிலிருந்த நண்பனை தூக்கிவிட்ட சிவாஜி கணேசன்!.. பெரிய தயாரிப்பாளரும் ஆயிட்டாரு!..
ஒரு நடிகரோட வாழ்க்கைய ரசிகர்கள்தான் முடிவும் செய்வாங்க, ஆனா ஆரம்பத்துல அவங்களோட எதிர்காலத்த தீர்மானிப்பது தயாரிப்பாளர்கள்தான். ஆனால், சில ஹீரோக்கள் ஒருகட்டத்தில் தயாரிப்பாளர்களாகவும் மாறிவிடுவார்கள். அப்படி 1960லிருந்து 80 வரை நடிகராகவும், தயாரிப்பாளராவும் தமிழ் சினிமாவில் கலக்கியவர்தான் பாலாஜி.
சினிமாவில் எப்படியாவது தலைகாட்டி நடிச்சி சாதிக்கணும்ங்கற கனவோடு எல்லோரையும் மாதிரி வந்தவர் தான் பாலாஜி. ஆரம்பத்துல சிவாஜி கணேசனை மட்டும் வைத்தே படங்களை எடுத்துவந்தார். ஒரு காலகட்டத்துல ஜெமினி ஸ்டுடியோல போயி எனக்கு நடிக்க வாய்ப்புவேனும்னு கேட்க அவங்க இல்லேன்னு சொல்ல அப்போ எனக்கு இங்க ஒரு வேலயாவது குடுங்கன்னு கேட்டுருக்காரு.
இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!
அப்படி இருக்கும் போது ஓளவையார் படத்துல முருகக்கடவுள் வேஷத்துல நடிக்க ஒருத்தர் தேவைப்பட்டார். அப்போது அங்கே வேலை செய்து வந்த ஜெமினி கணேசன் ‘வேலை கேட்டு ஒரு பையன் வந்தான்ல அவன வேனும்னா நடிக்க வைக்கலாம்னு ஒரு ஐடியாவை சொல்ல உடனே ஓ.கே. சொன்னாராம் தயாரிப்பளர். இனி நமக்கு வரிசையா வாய்ப்பு வரும்னு நினைத்துக்கொண்டிருந்த பாலாஜி எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கல.
அப்புறம் ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டு இருக்கும் போது ஒரு படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைக்க, அந்த வேலையில மும்மூரமா ஈடுபட்டாரு பாலாஜி. ஆனால் அந்த படம் பெரிய அளவுல போகாம கடனாளி ஆனாராம். அதன்பின் சிவாஜியை வைத்து ஒரு படம் எடுத்தா கடன்லயிருந்து தப்பிக்கலாம்னு ஒரு ஐடியா கிடைச்சிச்சு.
இதையும் படிங்க: சிவாஜிக்கு சில்க் கொடுத்த மரியாதை… இதுலாம் ரொம்ப ஓவரா இருக்கே… இப்படி எல்லாமா நடந்தது?
அப்படி தனது நன்பரான திரிலோகச்சந்தர் இயக்கத்துல அந்த படம் வெளிவந்து ஹிட் ஆனது, நிம்மதி பெருமூச்சு விட்ட பாலாஜி அடுத்தடுத்து சிவாஜியை மட்டும் வைத்தே நிறைய படங்களை எடுக்க ஆரம்பிச்சார். ம்.ஜி.ஆர். பக்கம் போகாததாலவே சிவாஜி ரசிகர்கள் இவர அதிகமா விரும்ப ஆரம்பிச்சாங்களாம். அந்த நேரத்துல சிவாஜி, எம்.ஜி.ஆர் இவங்க இரண்டு பேருக்கும் இடையில மிகப்பெரிய போட்டி இருந்துச்சி.
பின் வந்த நாட்கள்ல ரஜினிகாந்த், கமலஹாசன்னு முன்னனி நடிகர்களை வைத்து படங்களை எடுக்க அது எல்லாமே பிச்சிகிட்டு போக, சுஜாதா ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் அப்போதைய தமிழ் சினிமால முக்கியமான இடத்தை பிடிச்சது. ரீ-மேக் படங்களை அதிகமா தயாரிச்ச நிறுவனங்கள் வரிசையில பாலாஜியாட கம்பெனியும் இணைந்தது. அப்படியே சில படங்களில் நடிச்சி தன்னோட நடிகர் ஆசையையும் நிறைவேத்திக்கிட்டாரு பாலாஜி.