Categories: Cinema History Cinema News latest news

சிவாஜி கணேசன் செயலால் அசிங்கப்படும் இளம் நாயகர்கள்… மாறுங்கோ இல்ல கஷ்டம் தான்..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமானது பராசக்தி படம் மூலமாகத்தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே… ஆனால், அவரை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு சிவாஜியின் குடும்பத்தினர் இன்று வரை செய்து வரும் மரியாதை பற்றி தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது பராசக்திதான். 1952ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் படம், அதற்கு முன்னர் இருந்த தமிழ் சினிமா ரெக்கார்டுகளை உடைத்தது என்றே சொல்லலாம். தமிழின் முன்னணி நாடக எழுத்தாளர்களில் ஒருவரான பாவலர் பாலசுந்தரம் அதே பெயரில் எழுதிய நாடகத்தை படமாக்க முன்வந்தார் வேலூரைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள். பலரும் சின்னப் பையனான கணேசனை அறிமுகப்படுத்த ஆட்சேபனை தெரிவித்தனர்.

ஆனால், என் தங்கை என்கிற பெயரில் வெளியான நாடகத்தைப் பார்த்த பெருமாள், கணேசன்தான் தன்னுடைய படத்தின் ஹீரோ என்பதில் உறுதியாக இருந்தார். சக்தி நாடக சபாவில் நடந்த நூர்ஜஹான் நாடகமும் இதில் முக்கியப் பங்காற்றியது. அதில், சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்திருந்தார். பலர் சொல்லியும் சிவாஜியை அவர் மாற்றவில்லை. பராசக்தி படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது, ஒல்லியாக இருந்த சிவாஜியை மாற்றிவிட்டு கே.ஆர்.ராமசாமியை நடிக்க வைக்கலாம் என்று ஏ.வி.மெய்யப்ப செட்டியார் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், ஏ.வி.பெருமாள் சிவாஜிதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

படத்துக்கு வசனம் எழுதியவர் கருணாநிதி. படத்தில் நடிக்க ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட நடிகை சுலோச்சனா, கர்ப்ப காலம் காரணமாக நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு வந்த ஸ்ரீரஞ்சனி உள்ளே வந்தார். படத்தின் கிளைமேக்ஸில் வரும் எல்லோரும் வாழ வேண்டும் பாடலில் ராஜாஜி, பெரியார், பக்தவச்சலம் போன்ற அன்றைய பிரபலங்கள் இருக்கும்படி எடிட் செய்யப்பட்டிருந்தது.

பஞ்சாபி என்கிற பெயரில் பஞ்சுவே படத்தை எடிட் செய்திருந்தார். 11 பாடல்கள் இடம்பெற்றிருந்த பராசக்தி படத்தின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம். படத்தில் இடம்பெற்றிருந்த நீதிமன்ற காட்சியும் அந்தக் காட்சியில் இடம்பெற்றிருந்த வசனங்களும் இன்றளவும் தமிழ் சினிமாவில் முக்கியமான காட்சியாகப் பதிவாகியிருக்கிறது. வேலூரைச் சேர்ந்த தயாரிப்பாளர் பி.ஏ.பெருமாள்தான் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியது என்பதை சிவாஜி என்றென்றைக்கும் மறக்க மாட்டார்.

இதையும் படிங்க: சிவாஜி செயலால் கண்ணீர் விட்ட நடிகர்.. பார்த்து ஷாக்கான ரஜினிகாந்த்

அதற்கு உதாரணமாக ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் வேலூரில் உள்ள பி.ஏ.பெருமாளின் வீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சென்று ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதேபோல், தனது மறைவுக்குப் பிறகும் இந்த வழக்கம் தொடர வேண்டும் என்று சிவாஜி விரும்பினார். அந்தவகையில் சிவாஜி மறைவுக்குப் பிறகு அவரது வாரிசுகளான ராம்குமாரும் பிரபுவும் இந்த வழக்கத்தை ஆண்டுதோறும் கடைபிடித்து வருகிறார்கள்.

Published by
Akhilan