
Cinema History
“சிவாஜி படத்திற்கு தடை”… சென்சார் போர்டு எடுத்த அதிரடி முடிவு… என்ன காரணம் தெரியுமா ??
1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ஜல்லிக்கட்டு”. இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார். அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றி திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்தது. குறிப்பாக இளையராஜா இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் ஹிட் ஆனது.

Jallikattu
அமோக விநியோகம்
“ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே தமிழகத்தின் பல இடங்களில் இத்திரைப்படம் நல்ல விநியோகம் ஆனதாம். 1987 ஆம் ஆண்டின் ஆகஸ்து 15 ஆம் தேதி இத்திரைப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அதன் படி தணிக்கைச் சான்றிதழுக்காக தணிக்கை குழுவினரிடம் இத்திரைப்படத்தை அனுப்பினார்கள்.
படத்திற்கு வந்த வினோத தடை
“ஜல்லிக்கட்டு” படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அத்திரைப்படத்தை குறித்து விவாதித்தார்களாம். அதன் பின் தயாரிப்பாளரிடம் “இந்த படத்தை நாங்கள் தடை செய்கிறோம்” என கூறினார்களாம். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் “என்ன காரணம்?” என கேட்டார்களாம். அதற்கு அந்த தணிக்கை அதிகாரி “இந்த படத்தில் ஒரு நீதிபதியும் சிறைக்கைதியும் சேர்ந்து அவர்களது எதிரிகளை பழிவாங்கிவிட்டு சர்வ சாதாரணமாக அந்த குற்றங்களில் இருந்து விடுபட்டு போவது போல் காட்சியமைத்திருக்கிறீர்கள். அது மிகவும் தவறு. அவர்கள் செய்த குற்றத்திற்கான தண்டனையை வழங்குவது போல் ஒரு காட்சியை நீங்கள் இணைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Sivaji Ganesan
உடனே ஒப்புக்கொண்டு சிவாஜி
தணிக்கைக் குழுவினரின் அறிவுறுத்தலின்படி தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், சிவாஜி கணேசனிடம் சென்று முழு விவரத்தை கூறினார். அதனை தொடர்ந்து சிவாஜி கணேசனிடம் அரை நாள் கால்ஷீட் கேட்கப்பட்டது. உடனே சிவாஜி ஒப்புக்கொண்டாராம்.
புதிய காட்சியை இணைத்த இயக்குனர்
தணிக்கைக்குழுவினரின் அறிவுரைப்படி இயக்குனர் மணிவண்ணன் கிளைமேக்ஸ் முடிந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்களான இருவரும் நீதிபதியை தனியாக சந்தித்து “நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்துவிட்டோம். ஆனால் நாங்கள் தவறு செய்தது உண்மைதான். எங்களுக்கு நீங்கள் எந்த தண்டனை கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என கூறுவது போல் ஒரு காட்சியை இணைத்தார்.
இதையும் படிங்க: “மனசாட்சியே இல்லையா?”… ஆர்யா படத்தை பார்த்து நொந்துப்போன உதயநிதி… பாவம் மனுஷன்…

Sivaji Ganesan
தணிக்கை குழு ஒப்புதல்
இந்த காட்சியை இணைத்த பிறகு தணிக்கைக்குழுவிடம் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்கள். அதன் பின் அத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில பாடல் வரிகளை மட்டும் கட் செய்துவிட்டு படத்தை வெளியிட அனுமதித்துவிட்டார்களாம்.
தள்ளிப்போன ஜல்லிக்கட்டு
“ஜல்லிக்கட்டு” திரைப்படத்தை அந்த ஆண்டின் ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்த நிலையில், தணிக்கைக்குழுவால் நேர்ந்த தாமதத்தால் அத்திரைப்படத்தை ஆகஸ்து 28 ஆம் தேதியான விநாயகர் சதுர்த்திக்கு வெளியிட படக்குழு முடிவெடுத்ததாம். அதன் படி விநாயகர் சதுர்த்தி அன்று அத்திரைப்படம் வெளியானது.

Sivaji Ganesan
அமோக வெற்றி
மேலும் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதில் இன்னும் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டதாம். ஆதலால் “ஜல்லிக்கட்டு” திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.