காலால் மிதிக்க வந்த யானையை வார்த்தையாலேயே கட்டுப்படுத்திய சிவாஜி கணேசன்!! கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கூட...
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனின் நடிப்பு திறமையை குறித்து நாம் தனியாக கூற வேண்டிய அவசியம் இல்லை. நடிப்புக்கென்றே ஒரு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
ஆனால் சிவாஜி கணேசன் யானைகளின் பாஷையை அறிந்தவர் என்ற செய்தியை பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். சிவாஜி கணேசன் கேரளாவில் இருந்தபோது யானைகளின் மொழியை கற்றுக்கொண்டாராம். இவ்வாறு அவர் கற்றுக்கொண்ட யானைகளின் மொழியை ஒரு திரைப்படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார். அது எந்த திரைப்படம் என்பதை குறித்தும், அது என்ன காட்சி என்பதையும் குறித்தும் இப்போது பார்க்கலாம்.
1966 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி, பத்மினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சரஸ்வதி சபதம்”. இத்திரைப்படத்தை ஏபி நாகராஜன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெறும் வெற்றி பெற்றிருந்தது.
இத்திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சிவாஜி கணேசனை யானை மிதிக்க வருவது போலவும், அந்த யானையிடம் சிவாஜி பல வசனங்கள் பேசி தன்னை மிதிப்பதில் இருந்து தடுப்பது போலவும் அந்த காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அவ்வளவாக பரிச்சயமில்லாத காலகட்டம் என்பதால் நிஜ யானையே அக்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த விஜயகாந்த் பாடல்.. அடேங்கப்பா!!
இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பு யானையை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது. சிவாஜியை போல் ஒரு டம்மி பொம்மையை படுக்க வைத்து அதில் யானையை மிதிக்க சொன்னார்கள். யானை ஒரே அடியாக மிதித்துவிட்டது. இந்த யானையை பயிற்றுவிக்க முடியாது என்று எண்ணிய இயக்குனர் ஏபி நாகராஜன், “நாம் டம்மியை வைத்தே எடுத்துவிடுவோம், நீங்கள் இந்த காட்சியில் நடிக்க வேண்டாம்” என கூறினாராம்.
ஆனால் சிவாஜியோ “பரவாயில்லை. யானை மிதித்து ஒரு வேளை நான் இறந்துபோனால் ஷூட்டிங்கிலேயே செத்தான் கணேசன் என்று பெயர் வரட்டும்” என்றாராம். அதன் பின் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது நிஜமாகவே அந்த யானை மிதிக்க வந்தபோது யானையிடம் பேசியே அதனை இயக்கினாராம். அந்த யானையும் சரியாக மிதிக்க போன காலை அப்படியே நிறுத்திவிட்டதாம்.