ஆசையா கேட்ட சிவாஜி.. அதிர்ச்சியான ரஜினி.. ஆனா செஞ்சாரு பாருங்க அதான் சூப்பர்ஸ்டார்!..

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்தும், சிவாஜி கணேசனுக்கும் இடையில் எப்போதுமே ஒரு அப்பா மகனுக்கான பாசம் இருக்கும். அதைப்போல அவர் வீட்டில் இருக்கும் அனைவரிடத்திலும் நன்றாக பழகுவாராம் ரஜினிகாந்த். அப்படி இருக்கும் போது சிவாஜி சூப்பர்ஸ்டாரிடம் ஒரு கடைசி ஆசையை கேட்டு இருந்தாராம்.

தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் எண்ட்ரியானவர் ரஜினிகாந்த். தொடர்ச்சியாக பல படத்தில் நடித்து தன்னுடைய இடத்தினை கோலிவுட்டில் தக்க வைத்தவர். பெரிய போராட்டத்துக்கு பின்னர் சூப்பர்ஸ்டாராக தனக்கென ஒரு இடத்தினை உருவாக்கி விட்டார்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி பெத்த புள்ள இப்படி நிக்குதே!.. ஓவர் டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் ஜான்வி கபூர்!..

அப்போதைய காலத்தில் தான் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க தொடங்கி இருந்தார் சிவாஜி. ரஜினியுடன் படையப்பா படத்தில் நடித்த சிவாஜிக்கு ஒரு கோடி சம்பளமாக கொடுக்க சொன்னதும் ரஜினி தானாம். அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமும் சிவாஜிக்கு அதே சம்பளத்தை கொடுத்ததாம்.

அவர் திரை வாழ்க்கையிலேயே அதிக சம்பளம் வாங்கிய முதல் படம் படையப்பா தானாம். 1999ம் ஆண்டு மன்னவரு சின்னவரு, படையப்பா மற்றும் பூப்பறிக்க வருகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அது தான் அவர் திரை வாழ்க்கையில் கடைசியாக நடித்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் இறப்பதற்கு சில காலம் இருக்கும் போது ரஜினிகாந்தினை அழைத்து பேசினாராம் சிவாஜி. அப்போ, ரஜினி நான் இறந்துவிட்டா என் இறுதி ஊர்வலத்தில் நீ கூடவே வரணும் எனக் கேட்டாராம். அவர் கேட்ட விஷயத்தால் ரஜினிக்கு அதிர்ச்சியாகி விட்டதாம்.

இதையும் படிங்க: விஜயகாந்த்தின் அந்த படத்தின் ஆடியோவுக்கே தெருவை விலைக்கு வாங்கிரலாம்! அந்தளவு லாபம் சேர்த்த படம்

ஏன்ப்பா இப்படி எல்லாம் பேசுறீங்க உங்களுக்கு எதுவுமே ஆகாது என ஆறுதல் கூறி இருக்கிறார். ஆனால் சிவாஜியோ எனக்கு வயசு ஆகிட்டுப்பா. எப்போ என்ன வேணா நடக்கும். அதுனால நான் கேட்டதை நீ செய்வீயானு முதலில் சொல்லுப்பா எனக் கேட்டாராம்.

ரஜினியும் மறுக்காமல் கண்டிப்பாக செய்கிறேன் என்றாராம். அதைப்போல ரஜினியிடம் சொல்லிய சில நாட்களிலேயே சிவாஜி கணேசன் உயிரிழந்து விட்டாராம். அவருக்கு வாக்கு கொடுத்தது போலவே மின் மயானத்துக்கு அவரினை ஏற்றி சென்ற வண்டியிலேயே சிவாஜி கூடவே ரஜினியும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story