Connect with us
sivaji

Cinema History

பயந்துபோன அம்மா!. சிவாஜிக்கு நடந்த திடீர் கல்யாணம்.. இவ்வளவு நடந்திருக்கா!..

நாடகங்களில் சிறப்பாக நடித்து புகழ் பெற்று அப்படியே சினிமாவில் நுழைந்தவர் சிவாஜி கணேசன். நாடகம் ஒன்றில் வீரபத்ர சிவாஜியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவருக்கு சிவாஜி கணேசன் என்கிற பட்டத்தை பெரியார் கொடுத்தார். அறிமுகமான முதல்படமான பராசக்தி திரைப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்து திரையுலகமே மிரண்டு போனது.

sivaji 1

sivaji 1

அதன்பின் பல படங்களில் நடித்து முன்னனி நடிகராக மாறினார். நல்ல கதையம்சம் கொண்ட, செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த குடும்பபாங்கான கதைகளில் தொடர்ந்து நடித்து நடிகர் திலகமாக மாறினார். இவருக்கு திருமணம் நடந்த கதையை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்.

sivaji

சிவாஜி கணேசன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் அம்மா முடிவெடுத்தார். ஆனால், நடிகர்களை ‘கூத்தாடிகள்.. மது அருந்துவார்கள்.. பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பார்கள், படிப்பறிவில்லாதவர்கள்’ என்றெல்லாம் நினைத்து யாரும் பெண் கொடுக்க தயங்கிய காலம் அது.

எனவே, பராசக்தி படம் வெளியாகிவிட்டால் தனது மகனுக்கு பெண் கிடைக்காமல் போய்விடுமோ என சிவாஜியின் அம்மா பயந்துவிட்டார். எனவே, சிவாஜியின் அக்கா மகள் கமலாவையே அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார். கமலாவின் சொந்த ஊர் கும்பகோணம் சுவாமிமலை அருகே உள்ள களத்தூர்.1952ம் வருடம் மே மாதம் 1ம் தேதி திருமண தேதி முடிவானது. சுவாமிமலையில் திருமணம் நடந்தது.

sivaji

 

சென்னையிலிருந்து கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், கண்ணதாசன் உள்ளிட்ட சிலர் அவரின் திருமணத்தில் கலந்து கொண்டனர். ஒரு தமிழ் ஆசிரியர் திருக்குறளை மந்திரமாக ஓத, கண்ணதாசன் தாலியை எடுத்து கொடுக்க சிவாஜியின் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் எம்.ஜி.ஆர் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு எல்லோருக்கும் உணவு பறிமாறினார். நடிகர் திலகம் சிவாஜியின் திருமண மொத்த செலவு மொத்தம் ரூ.500 ஆக இருந்தது.

மே மாதம் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில், அதேவருடம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு பராசக்தி படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top