மீண்டும் தயாராகிறது சிவாஜியின் அந்த மாஸ் ஹிட் திரைப்படம்… யார் நடிக்கிறாங்கன்னு தெரியுமா!!

by Arun Prasad |
Sivaji Ganesan
X

Sivaji Ganesan

1987 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”. இத்திரைப்படத்தை மணிவண்ணன் இயக்கியிருந்தார். சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார்.

Jallikattu

Jallikattu

“ஜல்லிக்கட்டு” திரைப்படம் வெளிவந்த சமயத்தில் இத்திரைப்படம் மிக முக்கியமான வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இதில் சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார்.

எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனும் சத்யராஜ்ஜும் மிக நெருக்கமாக பழகி வருவார்கள். பின் இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.

Jallikattu

Jallikattu

இதில் சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். குறிப்பாக இத்திரைப்படம் சத்யராஜ்ஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாகவும் அமைந்தது.

Sathyaraj

Sathyaraj

இந்த நிலையில் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்கவுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார். மேலும் இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இன்னும் எந்த நடிகரையும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். எனினும் இத்திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சித்ரா லட்சுமணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு இத்தனை தடங்கல் வந்ததா?? என்னப்பா சொல்றீங்க!!

Next Story