அந்த பாட்டு மட்டும் இல்லனா படம் ஃபிளாப்!.. மொக்கை படத்தை ஓட வைத்த ஹிட் பாடல்!..

by Akhilan |   ( Updated:2023-12-12 09:29:00  )
அந்த பாட்டு மட்டும் இல்லனா படம் ஃபிளாப்!.. மொக்கை படத்தை ஓட வைத்த ஹிட் பாடல்!..
X

Sivaji Ganesan: தான் நடிக்கும் படங்களின் கதையை தெளிவாக கேட்டு அது தனக்கு செட்டாகும் என்பதை உறுதி செய்துக் கொண்ட பின்னரே நடிக்க தொடங்குவது சிவாஜி கணேசனின் பழக்கம். ஒருமுறை அவர் கதையில் சொதப்ப இசையமைப்பாளரால் தப்பினராம்.

கே.எஸ்.குற்றாலிங்கம் தயாரிப்பில் உருவான திரைப்படம் பொன்னூஞ்சல். இப்படத்தில் சிவாஜி கணேசனுடன், முத்துராமன், நம்பியார், காந்திமதி, சோ, மனோரமா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு இருந்ததால் மிகப்பெரிய ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 1973ம் வருடம் இப்படம் வெளியானது.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் இந்த படத்தில் ஏழு பாடல்கள் இடம் பெற்றிருந்தது. ஆண் குரலுக்கு டி.எம்.சௌந்தராஜன் எல்லா பாடல்களையும் பாடினார். பெண் குரலுக்கு சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி ஆகியோர் பாடி இருந்தனர்.

சிவாஜியின் பாரத விலாஸ் திரைப்படம் 84 நாள்களையும், ராஜராஜசோழன் திரைப்படம் 77 நாள்களையும் நிறைவு செய்தபோது சிவாஜியின் ‘பொன்னூஞ்சல்’ திரைப்படம் வெளியானது. ஒரே நேரத்தில் மூன்று படங்கள் திரையரங்குகளில் ஓடியது.

இதையும் வாசிங்க: மார்க்கெட் போகும் என முன்பே கணித்த ஜெய்சங்கர்!. அதற்காக அவர் செய்ததுதான் ஹைலைட்!…

கிட்டத்தட்ட அப்போதைய காலத்தில் அதிக இசைத்தட்டு விற்று சாதனையே செய்ததாம். இப்பாடலுக்காகவே அந்த படத்தினை பார்க்க கூட்டம் அலைமோதியது. அதனை தொடர்ந்தே படத்தின் வசூலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் மட்டும் இல்லாமல் போயிருந்தால் பொன்னூஞ்சல் படம் தோல்வி அடைந்திருக்கும் என அப்போதே சொல்லப்பட்டது.

இதையும் படைங்க: முகத்தை திருப்பிக்கொண்ட பிரபல நடிகர்..! அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்து லைக் வாங்க வைத்த சிவாஜி..!

Next Story