ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் தனது இயக்கத்திலோ, அல்லது தனது கதை, திரைக்கதையிலோ ஏதேனும் ஒரு படம் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கும். சிலர் மட்டுமே நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற துறைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளாமல் இருப்பார்கள்.
கமல் சில படங்களை இயக்கியுள்ளார். பல திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். தயாரித்துள்ளார் என அடுக்கி கொண்டே போகலாம். அதே போல, ரஜினியும் வள்ளி, பாபா போன்ற படங்களுக்கு கதை, திரைக்கதைகளில் வேலை செய்துள்ளார்.
அந்த காலத்திலேயே வெற்றிகரமாக அனைவரும் ரசிக்கும் படியாக இதனை ஆரம்பித்த நடிகர் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் , உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் எனும் பிரமாண்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார் எம்ஜிஆர்.
இதையும் படியுங்களேன் – இப்டி மாட்டிக்கிட்டிங்களே தளபதி.!? கண்டுபிடித்து கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.!
ஆனால், எம்.ஜி.ஆர் காலத்தில் அவருக்கு நிகராக புகழின் உச்சத்தில் இருந்த நடிகர் சிவாஜி கணேசன். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் இன்று வரை காலத்தால் அழியாத காவியங்களாக இருக்கின்றன. இவர் நடிப்பில் பல உச்சங்களை தொட்டிருந்தாலும் இயக்கம் பக்கம் தன்னை ஈடுபடுத்தி கொண்டதே கிடையாது. இதுவரை ஒரு படத்தில் கூட நடிப்புக்கே திலகமாய் இருந்த சிவாஜி இயக்கியது கிடையாது.
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…