பராசக்தி படத்திற்கு சிவாஜி சம்பவளம் இவ்வளவுதானா?!. என்னடா நடிகர் திலகத்துக்கு வந்த சோதனை!...
Parasakthi movie: எம்.ஜி.ஆரை போலவே ஏழு வயதில் நடிப்பின் மீது ஆர்வம் எற்பட்டு நாடகத்தில் நடிக்க போனவர் சிவாஜி கணேசன். பல நூறு நாடங்களில் பல வேஷங்களை போட்டு நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை போல போராடியெல்லாம் சிவாஜி சினிமாவுக்கு வரவில்லை. பராசக்தி படத்திற்கு இவரை தேர்ந்தெடுத்து ஏவிஎம் நிறுவனம் நடிக்க வைத்தது.
ஏனெனில், தான் நடிக்கும் நாடகங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் பாராட்டை பெற்று பிரபலமானதால் அவருக்கு சினிமாவிலும் சுலபமாகவே வாய்ப்பு கிடைத்தது. அதேநேரம், சிவாஜி இல்லாத தமிழ் சினிமாவை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது என சொல்லுமளவுக்கு விதவிதமான கதாபாத்திரங்களில் கலக்கியவர் இவர்.
இதையும் படிங்க: சிவாஜி நடித்த பாடலுக்கு குரல் கொடுத்த டி.எம்.எஸ்!.. ஆனாலும் அப்செட் ஆன எம்.எஸ்.வி..
கடவுளானாலும் சரி.. சாமனியனாலும் சரி.. நடிப்பில் அசத்துவார். பல சரித்திர கதாபாத்திரங்களை, கடவுள் அவதாரங்களை, சுதந்திர போராட்ட வீரர்களை கண் முன்னே நிறுத்தியர் சிவாஜி. நடிப்பு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என இலக்கணம் வகுத்தவர். அவருக்கு பின்னால் நடிக்க வந்த பல நடிகர்களுக்கும் தனது படங்களால படம் எடுத்தவர்.
சினிமாவில் சிவாஜி அறிமுகமானது பராசக்தி படத்தில்தான். இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய சிவாஜி ‘அந்த காலத்தில் தேவி நாடக சபா என ஒன்று இருந்தது. அதில் பாவலர் பாலசுந்தரம் எழுதிய பராசக்தி எனும் நாடகத்தை போட்டு வந்தார்கள். அந்த நாடகத்தை எனக்கு நடிப்பு சொல்லிகொடுத்த எனது தெய்வம் பி.ஏ.பெருமாள் முதலியார் மற்றும் ஏவிஎம் நிறுவனத்திரும் போய் பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: சிவாஜியை வைத்து இயக்கிய பிரபல இயக்குனர்… எம்.ஜி.ஆரை மட்டும் இயக்கலையாம்.. ஏன் தெரியுமா..?
அதை சினிமாவாக எடுக்க நினைத்த ஏவிஎம் அதற்கான உரிமையை வாங்கியது. இதில், யாரை ஹீரோவாக போடலாம் என யோசித்தபோது பெருமாள் முதலியார் எனது பெயரை பரிந்துரைத்தார். எனக்கு அழைப்பு வந்தது. நானும் நேரில் சென்று அவர்களை சந்தித்து அதில் தேர்வானேன். அப்போது மாதம் எனக்கு ரூ.250 என சம்பளம் பேசப்பட்டது. அப்படித்தான் பராசக்தி படத்தில் நான் நடித்தேன்’ என நடிகர் திலகம் கூறினார்.
COPYRIGHT 2024
Powered By Blinkcms