More
Categories: Cinema History Cinema News latest news

எம்.ஜி.ஆரோட நடிப்பை பத்தி கேட்டத்துக்கு சிவாஜி கணேசன் இப்படி பேசிவிட்டாரே? என்னப்பா இது!

எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோர் அக்காலகட்ட தமிழ் சினிமாவில் மிக பெரிய ஜாம்பவானாக வலம் வந்தவர்கள். இருவரும் தொழில் ரீதியாக போட்டியாளர்களாக இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அண்ணன்-தம்பியாக பழகி வந்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசனை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்து அவருடன் அமர்ந்து சாப்பிடுவாராம். அந்தளவுக்கு இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள்.

Advertising
Advertising

எனினும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கும் சிவாஜி ரசிகர்களுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் படங்களை சிவாஜி ரசிகர்கள் படமாக கூட மதிக்கமாட்டார்களாம். அதே போல் சிவாஜி கணேசனின் திரைப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கிண்டல் செய்வார்களாம்.

எம்.ஜி.ஆர் மாஸ் ஹீரோவாக இருந்தாலும் சிவாஜி கணேசன் நடிகர் திலகமாகவே வலம் வந்தார். நடிப்பிற்கு என்றே ஒரு பல்கலைக்கழகமாக சிவாஜி கணேசன் அறியப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மூத்த பத்திரிக்கையாளர் சுரா, சிவாஜி கணேசன் குறித்து ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

MGR and SIvaji

சென்னை கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான சிதம்பரம், சிவாஜி கணேசனுக்கு மிக நெருக்கமான நண்பராக இருந்தாராம். அவர் ஒரு முறை சிவாஜி கணேசனை பார்த்து, “எம்.ஜி.ஆரின் நடிப்பை பற்றி உங்களின் கருத்து என்ன?” என்று கேட்டாராம். எப்படியும் எம்.ஜி.ஆரின் நடிப்பை விமர்சிக்கத்தான் போகிறார் என்று நினைத்துக்கொண்டாராம் சிதம்பரம்.

ஆனால் சிவாஜி கணேசனோ, “எம்.ஜி.ஆர் அவருக்கு என்று ஒரு பாணி வைத்திருக்கிறார். நான் எனக்கென்று ஒரு பாணி வைத்திருக்கிறேன். அவர் திரைப்படங்களில் அவர்  ஊருக்காக உழைப்பார். என்னுடைய திரைப்படங்கள் குடும்ப திரைப்படங்களாக இருக்கும். ஆனால் அவருடைய பாணியிலான திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் மிகச் சிறந்த நடிகர். அந்த பாணி படங்களில் அந்த பாணிக்கு ஏற்ற கதைகளில் அவர் மிகப் பெரிய நடிகர்” என்று எம்.ஜி.ஆரை பாராட்டினாராம்.

இதையும் படிங்க: மணிரத்தினத்துக்கு எவ்வளவோ செஞ்சிருக்கேன்; அவருக்கே தெரியாது: இளையராஜா சொன்ன சீக்ரெட்

Published by
Arun Prasad

Recent Posts