நடிப்பை பார்த்து வியந்து வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த நடிகர் திலகம்!. அட அவரா?!..

தமிழ் சினிமாவில் நடிப்பின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பயிற்சி பெற்றவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் வீட்டில் சொல்லாமல் ஓடிப்போய் ‘நான் ஒரு அநாதை’ என சொல்லி நாடக கம்பெனியில் சேர்ந்தவர் இவர்.
பல மாதங்கள் சிவாஜியை தேடி கண்டுபிடிக்க முடியாமல் மகன் எங்கோ சென்றுவிட்டான். இல்லை இறந்துவிட்டான் என்று கூட அவரின் அம்மா நினைத்தாராம். அதன்பின்னரே அவர் நாடக கம்பெனியில் இருந்தது அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதை சிவாஜியே பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரஜினியும் கமலும் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? எப்பவுமே கெத்து சூப்பர்ஸ்டார்தான்..!
நாடகத்தில் பயிற்சி எடுத்த சிவாஜி தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பான பராசக்தி படத்திலேயே அசத்தலான நடிப்பை கொடுத்தார். அப்போது வேறு சில நடிகர்களை வைத்து படமெடுக்கவே ஏவிஎம் நிறுவனம் ஆசைப்பட்டது. ஆனால், சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அதை ஏற்கவில்லை.
திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களிலும் நடித்து நடிகர் திலகமாக மாறினார் சிவாஜி. சிவாஜியை போல யாராலும் நடிக்க முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அவர் ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை என சொல்லுமளவுக்கு அசத்தினார். ஆனால், இதே சிவாஜி ஒரு கதாசிரியரின் நடிப்பை பார்த்து வியந்து போன சம்பவம் பற்றி தெரிந்து கொள்வோம்.
இதையும் படிங்க: நம்ம எல்லாத்தையும் நல்லா ஏமாத்துராரு!.. சிவாஜியின் நடிப்பை சோதித்து பார்த்த இயக்குனர்கள்!..
60களில் சினிமாவுக்காக காமெடி கலந்த கதைகளை எழுதி வந்தவர் சித்ராலயா கோபு. இவர் நடித்த ஒரு நாடகத்தை பார்க்க போனார் சிவாஜி. கதைப்படி இளமையாகும் ஒரு பவுடரை ஒருவர் கண்டுபிடிக்க தெரியாமல் பாட்டு வாத்தியாராக இருக்கும் கோபு அதை சாப்பிட்டுவிடுவார். கர்நாடக சங்கீதம் பாடும் அவர் இளைஞரை போல திடீரென வெஸ்டர்ன் பாடல்களை பாடுவார். அதில், சிறப்பாக நடித்து கைத்தட்டலை வாங்கினார் கோபு.
அவரின் நடிப்பை பார்த்து அசந்துபோனார் சிவாஜி. உடனே அந்த நாடகத்தில் ஹீரோவாக நடித்த கோபி மற்றும் கோபு இருவரையும் வீட்டிற்கு அழைத்தார். அங்கு அவர்கள் போனபோது ஒரு சிறப்பான விருந்து தயாராகி வந்தது. நீ காமெடி கதை எழுதுவன்னு தெரியும். ஆனா இப்படி நடிப்பேன்னு நான் எதிர்பார்க்கல. அதுக்குதான் இந்த விருந்து’ என சொன்னார். சிவாஜி ஒரு நல்ல நடிகர் மட்டுமல்ல. நல்ல ரசிகரும் கூட என்பதை இந்த சம்பவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.