நடித்த படத்திலேயே மீண்டும் நடித்த சிவாஜி கணேசன்… எல்லாத்துக்கும் அந்த தயாரிப்பாளர்தான் காரணம்…
1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், அம்பிகா, பாண்டியன், சில்க் ஸ்மிதா, ஜெய்சங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வாழ்க்கை”. இத்திரைப்படத்தை சி.வி.ராஜேந்திரன் இயக்கியிருந்தார். சித்ரா லட்சுமணன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு நாள் சித்ரா லட்சுமணன், சிவாஜி கணேசனை நேரில் பார்க்கச் சென்றாராம். அப்போது சிவாஜி கணேசன் “வாழ்க்கை படம் முழுவதையும் போட்டு பார்த்தியா? எப்படி வந்திருக்கு படம்?” என கேட்டாராம்.
அதற்கு சித்ரா லட்சுமணன் “படத்தை பார்த்தேன். மிகவும் பிரமாதமாக வந்திருக்கிறது. நான், என்னுடன் படத்தை பார்த்த சி.வி.ராஜேந்திரன் எல்லாருக்கும் பல காட்சிகளில் கண்கள் கலங்கிவிட்டது” என்று சொன்னாராம்.
அப்போது சிவாஜி கணேசன் “படத்தில் நான் நடிச்சதில் எதாவது ஒரு காட்சி திருப்தியாக இல்லைன்னா சொல்லு, நான் திரும்ப நடிச்சி தரேன்” என கூறினாராம். இது குறித்து சித்ரா லட்சுமணன் தனது பேட்டியில் பேசியபோது …
“சிவாஜி சார் அப்படி கேட்டதுமே என்னுடைய அனுபவமின்மை காரணமாகவும் வயது காரணமாகவும் சிவாஜியிடம் ‘ஒரு காட்சி மட்டும் திரும்ப எடுத்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது, அந்த ஒரு காட்சியில் மட்டும் உங்களது நடிப்பு கொஞ்சம் கம்மியாக இருக்கிறது’ என கூறினேன். சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர். அவர் நடிப்பை குறை சொல்றதுக்கு நான் யார்?
வாழ்க்கை நான் தயாரித்த இரண்டாவது திரைப்படம். ஆனால் சிவாஜிக்கோ அது 242 ஆவது திரைப்படம். அப்படிப்பட்ட நடிகரிடம் ‘உங்க நடிப்பு இன்னும் கொஞ்சம் சிறப்பா அமைஞ்சிருக்கலாம்’ன்னு நான் கூறினேன். அதற்கு சிவாஜி கணேசனும் அந்த காட்சியில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இயக்குனர் மரியாதையாக அழைத்ததால் கோபித்துக்கொண்ட எம்.ஜி.ஆர் பட நடிகை… இதென்னய்யா புதுசா இருக்கு!!
சிவாஜி கணேசன் அந்த காட்சியில் மீண்டும் நடிப்பதாக கூறியபோது சித்ரா லட்சுமணன் ஆடிப்போய்விட்டாராம். தான் சொன்னது போலவே சிவாஜி கணேசன் அதற்கு அடுத்த வாரம் வந்து நடித்துக்கொடுத்தாராம். நடிகர் திலகத்தின் இந்த பெருந்தன்மையை குறித்து அப்பேட்டியில் மிகவும் சிலாகித்து பேசியுள்ளார் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.