சிவாஜி கணேசனுக்கு காமெடி வராதா?... நடிகர் திலகத்தை ஓரங்கட்டிய என்.எஸ்.கே…
நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் தனது அசாத்திய நடிப்பால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். தனது நடிப்பாற்றலுக்காக பல விருதுகளை பெற்ற சிவாஜி கணேசன், பிரெஞ்ச் அரசின் செவாலியர் விருதையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சக்சஸ்
சிவாஜி கணேசன் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம் “பராசக்தி”. இதில் அவர் பேசிய சக்சஸ் என்ற வசனம், அவர் உச்சரித்து முடித்த பின்னும் அவருக்கு பின்னாலேயே தொடர்ந்தது. நாடகத்துறையில் இருந்ததாலோ என்னவோ வசனங்களை பிசிறு தட்டாமல் பேசுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்த பலரும் அரண்டுபோயினர். சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கே சொத்து என்பதை பின்னாளில் சினிமாத்துறையினர் உணர்ந்துகொண்டனர்.
நாடக கம்பெனியில் சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன் சினிமாவில் நடிக்க தொடங்குவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. அதாவது சிவாஜி கணேசன் நாடகக் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்தபோது கோவையில் இருந்து சினிமாவில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது.
அப்போது அந்த நாடகக்குழுவினர் சிவாஜி கணேசனையும் அவருடன் இருந்த சக நாடக நடிகரான காகா ராதாகிருஷ்ணனையும் கோவைக்கு அனுப்பினார்கள்.
என்.எஸ்.கே
கோவையில் ஒரு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது சிவாஜி கணேசனும் காகா ராதாகிருஷ்ணனும் அங்கே சென்றனர். எனினும் அங்கு இருவருக்கும் தேர்வு நடத்தப்பட்டது.
ஒதுக்கப்பட்ட சிவாஜி
என்.எஸ்.கே. இருவருக்கும் தேர்வு வைக்க, அந்த தேர்வில் காகா ராதாகிருஷ்ணன் தேர்வானார். ஆனால் சிவாஜி தேர்வாகவில்லை. சிவாஜியின் நடிப்பு என்.எஸ்.கிருஷ்ணனை கவரவில்லையாம். இதை கேட்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
கலைவாணர்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர். 1930களில் இருந்து 60கள் வரை தமிழின் பல வெற்றித் திரைப்படங்களில் என்.எஸ்.கே நடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்த என்.எஸ்.கே. கலைவாணர் என்ற பட்டத்தையும் பெற்றார்.
கலைவாணராக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற என்.எஸ்.கே. ஒரு கொடை வள்ளலாகவே திகழ்ந்தார். ஒரு முறை எம்.ஜி.ஆர், “மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர் என்.எஸ்.கே” என ஒரு பேட்டியில் கூறினாராம்.
காகா ராதாகிருஷ்ணன்
தமிழின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த காகா ராதாகிருஷ்ணன் தனது நகைச்சுவையான நடிப்பால் பார்வையாளர்களை கவர்ந்தார். என்.எஸ்.கிருஷ்ணனை போலவே சிறந்த நகைச்சுவை நடிகராக மக்களின் மனதில் இடம்பெற்றார் காகா ராதாகிருஷ்ணன்.
சிவாஜிக்கு காமெடி வராதா?
என்.எஸ்.கே ஒரு நகைச்சுவை நடிகர். அதே போல் காகா ராதாகிருஷ்ணணும் நகைச்சுவை நடிகர்தான். ஆதலால்தான் தனது நடிப்பு என்.எஸ்.கிருஷ்ணனை கவரவில்லை என சிவாஜி கணேசன் தனக்கு தானே ஆறுதல் கூறிக்கொண்டாராம். ஆனால் பின்னாளில் சிவாஜி கணேசன் தனது பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் காமெடி காட்சிகளில் சக காமெடி நடிகருக்கு இணையாக அசத்திக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி தற்போது நடிகர் திலகமாக நமது நெஞ்சங்களில் குடிக்கொண்டிருந்தாலும், தனது தொடக்க காலத்தில் இவ்வாறு பல நிராகரிப்புகளை தாண்டித்தான் வந்திருக்கிறார்.