Cinema History
எனக்கு பட்டை நாமம் போட்டாங்க!. உனக்கு நாமக்கட்டி!.. சிவக்குமாரை அதிரவைத்த சிவாஜி!..
வாலிப பருவத்தை எட்டியபோதே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டவர் சிவக்குமார். ஆனால், அவரின் குடும்பத்திலோ அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அவரின் அம்மாவிடம் போராடி சமாதானம் செய்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவருக்கு சின்ன சின்ன வேஷங்கள் கிடைத்தது.
பக்தி படங்களில் முருக கடவுளாக நடித்தார். அதன்பின் சிவாஜிக்கு மகனாக கூட உயர்ந்த மனிதன் படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்தார். 70களில் கதாநாயகி மற்றும் கதாநாயகனின் தம்பியாக சில படங்களில் நடித்தார். 80களில் கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.
இதையும் படிங்க: இவன வச்சி என்ன பண்ணுவ?!.. கலாய்த்த நடிகை!.. வெறியேத்தி வேலை பார்த்த சிவக்குமார்!..
80களில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, கவிக்குயில், பவுர்ணமி அலைகள், ஆனந்த ராகம், சிந்து பைரவி, அன்னக்கிளி, தெய்வம் என பல படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். 90களில் குணச்சித்திர நடிகராக மாறி அப்பா வேடத்தில் நடித்து வந்த அவர் ஒருகட்டத்தில் சினிமாவில் நடிப்பதையே நிறுத்திவிட்டார்.
சிவக்குமாருக்கு மிகவும் பிடித்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடனும் சில படங்களில் நடித்திருக்கிறார். பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து இயக்குனராக மாறியிருந்த மணிவண்ணன் பரபரப்பான படங்களை இயக்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென ஒரு நாட்டுப்பற்றுள்ள கதையை எழுதினார். அதுதான் ‘இனி ஒரு சுதந்திரம்’.
இதையும் படிங்க: இது உருப்படாத தொழில்!.. போய் படிக்குற வேலைய பாருடா!.. மனோபாலாவிடம் கத்திய சிவக்குமார்!
இந்த படத்தில் சுதந்திர போராட்ட தியாகியாக சிவக்குமார் நடித்திருந்தார். இந்த படத்தை நடிகர் திலகத்திற்கு போட்டுக்காட்ட வேண்டும் என ஆசைப்பட்ட சிவக்குமார் அவரை அழைத்து படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார். படத்தை பார்த்த சிவாஜி கணேசன் ‘நானும் உன்ன மாதிரிதான் ஆர்வக்கோளாறில் வா.ஊ.சி கெட்டப்பில் கப்பலோட்டிய தமிழன் படத்தில் நடித்தேன். படமே ஓடவே இல்லை. எனக்கு பட்டை நாமம் போட்டாங்க.
இப்ப உனக்கும் நாமக்கட்டிய கரைச்சிக்கிட்டு இருக்காங்க. பெரிசா போடுவாங்க’ என சொல்லிவிட்டு போனாராம். இதைக்கேட்டு அதிர்ந்து போனாராம் சிவக்குமார். அவர் சொன்னபடியே இனி ஒரு சுதந்திரம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.