தயாரிப்பாளரை துப்பாக்கியால் சுட்ட சிவாஜி கணேசன்… ரத்த வெள்ளத்தில் பரபரப்பு… இப்படியெல்லாம் நடந்துருக்கா!
1958 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “பதி பக்தி”. இத்திரைப்படத்தை பீம் சிங் தயாரித்து இயக்கியிருந்தார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசனை சிவாஜி கணேசன் துப்பாக்கியால் சுடுவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டதாம். அந்த காட்சியில் பயன்படுத்துவதற்கு டம்மி புல்லட்டுகள் நிறைந்த ஒரு துப்பாக்கியை சிவாஜி கணேசனின் கையில் கொடுத்திருக்கிறார்கள்.
ஜெமினி கணேசனை நோக்கி சுடுவது போல் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது சிவாஜியின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து ஒரு குண்டு அங்கு நின்றுகொண்டிருந்த தயாரிப்பு நிர்வாகி ஜி.என்.வேலுமணியின் காலில் கீச்சிவிட்டது.
அது டம்மி குண்டுதான் என்றாலும் குண்டு பாய்ந்த வேகத்தில் அவரது காலில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனை கண்டு சிவாஜி கணேசன் பதறிப்போனார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
அப்போது மருத்துவமனையில் ஜி.என்.வேலுமணியை பார்க்க வந்த சிவாஜி கணேசன், “நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப்போகிறேன். நீங்கள் இப்போது தயாரிப்பு நிர்வாகியாக இருக்கிறீர்கள். இனி நீங்கள் தயாரிப்பாளராக மாறுங்கள். ஒரு புதிய நிறுவனத்தை தொடங்குங்கள். என்னை வைத்து முதல் படத்தை தயாரியுங்கள்.
நான் நடிப்பதால் உங்களுக்கு பல ஃபைனான்சியர்கள் பணம் தர தயாராக இருப்பார்கள். ஆதலால் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தபிறகு தயாரிப்பு பணியை தொடங்குங்கள். பீம் சிங் அத்திரைப்படத்தை இயக்குவார்” என்று கூறினாராம்.
இதனை தொடர்ந்து சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கிய ஜி.என்.வேலுமணி, சிவாஜியை வைத்து “பாகப்பிரிவினை” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோரை வைத்து பல வெற்றித்திரைப்படங்களை தயாரித்தார் ஜி.என்.வேலுமணி.
இதையும் படிங்க: ரஜினி படமா! இதோ வந்துட்டேன்… கலைஞருக்கே “நோ” சொன்ன பிரபல காமெடி நடிகர்… என்ன நடந்தது தெரியுமா?