Cinema History
சிவாஜி கணேசன் ஷூட்டிங் முன்னாடி இதை மறக்காம செஞ்சிடுவாராம்.. ஒருநாள் கூட மிஸ் பண்ணதே இல்லையாம்..!
Sivaji Ganesan: நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் படுக்கெட்டி. ஆனாலும் கூட அவர் தனக்கு எங்கையும் பிசிறிவிட கூடாது என்பதற்காக ஒரு விஷயத்தினை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பாராம். இதுகுறித்த ஆச்சரிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட நிறைய மொழிகளில் கிட்டத்தட்ட 288 படங்களில் நடித்துள்ளார். இதில் கோலிவுட்டில் மட்டுமே நாயகனாக 250 படங்களுக்கு மேல் நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தானாம். உணர்ச்சி பூர்வமான தமிழ் உச்சரிப்பு, நடிப்பு என அவரை முந்த இன்று வரை யாரும் இல்லை.
இதையும் படிங்க: கனகா கேட்ட ஒரே ஒரு உதவி! அத பண்ணிட்டா ஹேப்பி ஆயிடுவா – துணிந்து இறங்கும் குட்டிபத்மினி
சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் சிவாஜி நாடகத்தில் பிஸியாக இருந்தவர். கிட்டத்தட்ட 4 வயதிலேயே நடிப்பு மேல் காதல் கொண்டு நாடகம் நடிக்க தொடங்கினார். சிறுவனாக இருந்த போது ரொம்பவே ஒல்லியாக இருந்தாராம். அவரின் கண் மட்டுமே பெரிதாக காணப்படுமாம்.
இதை பார்த்தே மூக்கும், முழியுமாக இருக்கான் என நாடகத்தில் சேர்த்து கொண்டனராம். இவர் ஆசிரியர் சின்ன பொன்னுசாமி பிள்ளை கிருஷ்ணன் வேஷத்தை கொடுத்தாராம். அடுத்து சூர்ப்பனகை வேடம் தந்தாராம். இந்த வேடங்களில் தான் அதிகம் கண்ணால் நடிக்க முடியும் என அவர் செய்தாராம்.
இதையும் படிங்க: சமீபத்திய படங்கள் சொதப்பியதுக்கு புது காரணம் சொன்ன ப்ளூசட்டை மாறன்.. அட ஆமாப்பா..! சரியா தான் இருக்கு!
மேலும் தினமும் காலையில் குளிக்க போகும் போது கண்ணாடி முன் நின்று அன்று நடிக்க இருக்கும் கதாபாத்திரம் போல நடித்து பார்த்து கொள்வாராம். இதை பல வருடங்களாகவே காலையில் செய்வதை வழக்கமாகவே வைத்து இருந்தாராம். ஒரு நாள் மிஸ் செய்யாமல் செய்தார் என்பது தான் ஆச்சரிய விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.