சிவாஜியை பல மணி நேரம் காக்க வைத்த பெப்சி விஜயன்!.. மனுஷன் காண்டாகி என்ன பண்ணாரு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் நடிப்பே தனது மூச்சு என தன் உணர்வாலும் உணர்ச்சிகளாலும் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் நடிப்பால் கட்டிப் போட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பல நாடக மேடைகளில் ஏறி தன் அசாத்திய திறமையால் வெள்ளித்திரையில் நுழைந்தவர்.
நடித்த முதல் படத்திலேயே அனைவரின் ஈர்ப்பையும் கவனத்தையும் பெற்றவர். பராசக்தி படம் தான் இவரது வாழ்க்கையை திருப்பி போட்டது. பல சரித்திர படங்கள் , புராணங்கள் படங்கள் என அனைத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருப்பார்.
இதையும் படிங்க :பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ!.. நடிகை மீனாவின் மறுமணம் குறித்து வெளியான காரணம்!..
கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து அவருக்கென்று ஒரு தனிச்சிறப்பு வாய்க்கப்பெற்றார் சிவாஜி கணேசன். சிவாஜிக்கு முன் சிவாஜிக்கு பின் என சினிமாவை பிரித்து கணக்கிடலாம். அந்த அளவுக்கு சினிமாவை கரைத்து குடித்தவர்.
பராசக்தி முதல் படையப்பா வரை என்று இவரது கெரியரை புரட்டி பார்த்தால் திகைப்பே மிச்சமாக இருக்கும். சிவாஜி என்றாலே கம்பீரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சிலருக்கு அவருக்குள் புதைந்திருக்கும் நகைச்சுவை உணர்வை பற்றி ஒரு பேட்டியில் ஸ்டண்ட் மாஸ்டரும் நடிகருமான பெப்சி விஜயன் தெரிவித்ததாக சித்ரா லட்சுமணன் கூறினார்.
ஒரு படப்பிடிப்பு சமயத்தில் பெப்சி விஜயன் சண்டைக் காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தாராம். அப்போது சிவாஜி அவரிடம் என்னை எத்தனை மணிக்கு விடுவாய் என்று கேட்டாராம். ஏனெனில் ஸ்டண்டை பொருத்தவரைக்கும் பட இயக்குனரை விட ஸ்டண்ட் இயக்குனருக்கு தான் அந்த காட்சி படப்பிடிப்பு எப்பொழுது முடியும் என்று தெரியுமாம்.
இதையும் படிங்க : சிங்களத்தமிழ், கொங்கு தமிழ் பேசி அசத்திய கமல் எந்தப்படத்தில் முத்திரை பதித்தார்? மருந்தாக அமைந்தது எது?
சிவாஜி இப்படி கேட்டதும் சரியாக 4 மணிக்கு உங்களை விட்டு விடுகிறேன் என்று கூறினாராம். மாலை 4 மணியை தாண்டியும் சிவாஜியை அவர் விடவே இல்லையாம். அவர் சொன்ன நேரத்தை பெப்சி விஜயன் மறந்தே போனாராம். உடனே சிவாஜி படப்பிடிப்பில் இருந்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களின் கடிகாரத்தை வாங்கி கொண்டாராம்.
அந்த எல்லா கடிகாரங்களிலும் மணி 4 ஐத் தான் காட்டுகிறது. இன்னும் உன் கடிகாரத்தில் இன்னும் 4 மணி ஆகவில்லையா? என்று கேட்டாராம். அதன் பிறகு தான் விஜயனுக்கு தான் செய்த தவறு என்ன என நியாபகத்திற்கு வந்திருக்கிறது. உடனே சிவாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை சீக்கிரம் முடித்து விட்டு சிவாஜியை அனுப்பினாராம் பெப்சி விஜயன். இந்த விஷயத்தில் சிவாஜி சரியாக இருப்பவர். காலை எத்தனை மணிக்கு படப்பிடிப்போ அதற்கு முன்னதாகவே வந்த காத்துக் கொண்டிருப்பவர் சிவாஜி. அப்படிபட்ட சிவாஜியை காக்க வைக்கலாமா?