நாடகத்தில் அறிமுகமான சிவாஜி கணேசனின் நடிப்பினை கண்டு ஆச்சரியப்பட்ட பெருமாள் முதலியார் அவரின் பராசக்தி படத்தின் மூலம் கோலிவுட்டின் நாயகனாக அறிமுகப்படுத்தினார். நடிகர் திலகம், சிம்மக்குரலோன் என பல பெயர்கள் பெற்று இன்று வரை கோலிவுட்டில் அழியாத புகழை பெற்றவர் சிவாஜி கணேசன்.
ஆனால் அவரின் முதல் படத்தில் அவர் நடிப்பது அங்கிருந்த படக்குழு யாருக்குமே பிடிக்கவில்லையாம். சிவாஜியின் முதல் வசனம் சக்ஸஸ் வசனத்தினை ஒலிப்பதிவு செய்த என்ஜினியர் முதற்கொண்டு பலரும் அவரின் குரல் சரியில்லை, ஆள் பார்க்க நன்றாக இல்லை என பல குறைகளை சொன்ன போது அவர் தான் நடிகர் என்று உறுதியாக நின்றவர் பெருமாள் முதலியார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு இணையான ஆளுனா அது இவங்கதான்! போற போக்குல அடுத்த சர்ச்சையை கிளப்பிய சரத்குமார்
முதல் படப்பிடிப்பு முடிந்தவுடன் சிவாஜியை கையோடு அழைத்து சென்று உனக்கு சாப்பிடுவது மட்டுமே வேலை நன்றாக சாப்பிடு என பிடித்ததை வாங்கி கொடுத்து சண்டை பயிற்சி எல்லாம் சொல்லி கொடுத்து இருக்கிறார். அதை தொடர்ந்து பராசக்தி படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது . 1952ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்தப் படம், அதற்கு முன்னர் இருந்த தமிழ் சினிமா ரெக்கார்டுகளை உடைத்தது என்றே சொல்லலாம்.
படத்துக்கு வசனம் எழுதியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. படத்தின் கிளைமேக்ஸில் வரும் எல்லோரும் வாழ வேண்டும் பாடலில் அன்றைய பிரபலங்கள் ராஜாஜி, பெரியார், பக்தவச்சலம் இருக்கும்படி எடிட் செய்யப்பட்டிருந்தது பெரிய வரவேற்பினை பெற்றது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…
அவரின் ஆசைப்படி இன்று வரை ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு சிவாஜி வீட்டில் இருந்து முதலியார் வீட்டிற்கு சீர்வரிசை சென்று கொண்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தனக்கு செய்த நன்றியினை எப்போதுமே சிவாஜி மறக்கமாட்டார் என்பதற்கு இன்று இந்த செயல் பலரால் சொல்லப்பட்டு வருகிறது. தன்னை தூக்கி விட்ட பலரை மறக்கும் நடிகர்கள் மத்தியில் நடிகர் திலகம் செயலால் ஆச்சரியமான ஒன்று தான்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…