சிவாஜி எந்த இயக்குனரின் காலில் விழுந்து வணங்கினார் தெரியுமா? பராசக்தி நாடகத்துல நடிச்ச ஹீரோயின் இவரா..?!

by sankaran v |
Meena, Sivaji
X

Meena, Sivaji

நடிகர் திலகம் சிவாஜியை ஒரு சமயம் நடிகை மீனா பேட்டி எடுத்தார். அப்போது தன் முதல் பட அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் சிவாஜி. அதைப் பற்றிப் பார்ப்போம்.

சிவாஜியோட ஆரம்ப காலத்தை அவரால் மறக்கவே முடியாது என்கிறார். என்னோட கதையை நாவலா எழுதினா சுவையா இருக்கும். நாடகக் கம்பெனியில இருந்து வந்ததால நான் புதுவிதமா நடிக்கிறது, பேசறது எல்லாம் பார்த்த உடனே ஸ்டூடியோவுல உள்ளவங்க என்னைக் கிண்டல் பண்ணுவாங்க. 'என்னடா இந்தப் பையன் மீன் மாதிரி வாயை வாயைத் தொறக்கிறான். கடகடகடன்னு வாயில கூழாங்கல்ல போட்டுட்டு மெல்லுற மாதிரி மெல்லுறான்'னு சொன்னாங்க.

காரணம் அவங்க ஒரு விதமா வளர்ந்தவங்க. நான் ஒருவிதமா வளர்க்கப்பட்டவன். அப்புறம் வெளியில போய் நின்னுக்கிட்டு அழுவேன். டைரக்டர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள்ல பெரியவர் கிருஷ்ணன் எங்கிட்ட வந்து சொல்வாரு. 'கவலைப்படாதே, ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும். நாலு பேரு நாலு விதமா சொல்வாங்க. அதுக்காக நீ வந்து மன வருத்தப்பட்டுக்கிட்டு ஆக்ட் பண்ணாம போயிடாதே. நல்லா இன்னும் கவனமா நடி... இன்னும் நல்லா நடிக்கணும்'கற ஆர்வத்தை மனசுல வளர்த்துக்க.

Parasakthi

Parasakthi

நாளைக்குப் பாரு. இந்தப் படம் சக்சஸ் ஆன உடனே, யாரு யாரு உன்னை வேணாம்னு சொன்னாங்களோ... அவங்க அத்தனை பேரும் உன் பக்கத்துல நிக்கப் போறாங்க. அப்படின்னு சொன்னாரு. அவரோட வார்த்தை அப்படியே சத்தியமா பலிச்சிடுச்சு. அதனால தான் கிருஷ்ணன் அவர்களை எந்தக் கூட்டத்துல பார்த்தாலும் சாஷ்டாங்கமா அவரு கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணுவேன்... என்கிறார் நடிகர் திலகம்.

அந்தப் படத்துல கலைஞரின் வசனம் அற்புதம். சினிமா உலகத்துல ஒரு மாற்றத்தை ஏற்படுத்துனதே பராசக்தி வசனம் தான். ரெண்டு பேருக்கும் உள்ள உறவு ரொம்ப அதிகம். அவருக்கு ஈடா உலக அளவுலயே வசனம் எழுதுறதுல யாரும் இல்ல. பராசக்தி நாடகத்தை நான் பார்த்துருக்கேன்.

ஆனா நடிச்சது இல்ல. ஆனா நாடகத்துல ஹீரோவா ஆக்ட் பண்ணது சாமிக்கண்ணு. ஆனா அந்த நாடகத்துல ஹீரோயின் யாரு தெரியுமா? முதல் மரியாதை படத்துல 'சாமி எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்'னு சொல்வாரே... அவரு (ஏ.கே.வீராசாமி) தான் ஹீரோயின். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story