சிவாஜி ஆசையாக அழைத்த பாடகர்… சொதப்பிய நடிகர்.. கடைசியில எல்லாமே மாறிப்போச்சே!..

Published on: December 12, 2023
sivaji ganesan
---Advertisement---

Sivaji Ganesan: தமிழ் சினிமாவில் 60,70களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படம் பல நடிகர்களுக்கு தங்களது திரைப்பயணத்தை ஆரம்பிக்க ஊன்றுகோலாக அமைந்தது. எந்த நடிகராக இருந்தாலும் இப்படத்தின் வசனத்தை பேசிதான் சினிமாவில் வாய்ப்பு கேட்பார்களாம். அந்த அளவு இப்படம் மக்கள் மனதில் இடம் பிடித்தது.

இதையும் வாசிங்க:எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…

மேலும் பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற பல்வேறு திரைப்படங்களின் மூலம் நடிப்பிம் சகாப்தமாகவே விளங்கினார். இவர் தனது கடைசி காலம் வரையிலும் சினிமாவில் நடித்து வந்தார். இவர் நடித்த கடைசி திரைப்படம் படையப்பா. இப்படத்தில் இவர் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் 1958ஆம் ஆண்டு வெளியான சம்பூர்ண ராமாயணம். இப்படத்தில் சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு பிரபல கர்நாடக பாடகரான மதுரை சோமுவை தனக்காக பாடல்களை பாட சொன்னாராம் நடிகர் சிவாஜி.

இதையும் வாசிங்க:மொத்த பேரும் முட்டாளுங்க!.. படம் எடுத்து வீணாப்போனேன்!. புலம்பும் கஞ்சா கருப்பு..

அப்படத்தில் நடித்த ராவணன் கதாபாத்திரத்திற்கு வீணை கொடியுடைய வேந்தனே எனும் பாடல் வரிகள் இருந்தனவாம். அப்பாடலை மதுரை சோமு பாட அதற்கு அப்படத்தில் ராவணனாக நடித்த டி.கே.பகவதியால் வாயசைக்க முடியாமல் போனதாம். ஏனெனில், சோமு பாடிய வேகத்திற்கு அவரால் நடிக்க முடியவில்லை. உடனே அப்பாடலுக்கு மட்டும் சிதம்பரம் எஸ்.ஜெயராமனை பாட வைத்துள்ளனர். அதை கேள்வி பட்ட சிவாஜி கணேசன் அப்படத்தின் இயக்குனரிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார்.

பின் மதுரை சோமுவும் அப்பாடலுக்கு வேறு பாடகரை போட்டால் அப்படத்தில் தனது அனைத்து பாடல்களையும் நீக்கி விடும்படி கூறியுள்ளார். பின் இயக்குனரும் அப்படத்தில் மதுரை சோமு பாடிய அனைத்து பாடல்களையும் நீக்கி விட்டாராம். ஆசையாய் சிவாஜி அழைத்த பாடகரின் பாடல் கடைசியில் அப்படத்தில் இல்லாமலே போனது. இது சிவாஜிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.

இதையும் வாசிங்க:கண்களால் பேசி கதிகலங்க வைக்கும் நடிகை… இந்தப் பாஷைல பேசுறதுன்னா இவருக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி…!

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.