இந்திய சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்கள் என பட்டியல் எடுத்தால், அதில் கண்டிப்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயர் இருக்கும். அந்த அளவிற்கு அவர் நடித்த சமகாலத்தில் அவரை விட சிறப்பான ஒரு நடிகர் இல்லை என்கிற அளவிற்கு நடிப்பில் பெரும் சாதனைகளை செய்தவர் சிவாஜி கணேசன்.
பிரபலமாக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்தவர் சிவாஜி கணேசன். ஆனால் அவருக்கு வயதான பிறகு துணை கதாபாத்திரங்களிலேயே நடிக்க துவங்கினார்.
சிவாஜி கணேசன் துணை கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கிய போது சினிமா எவ்வளவோ மாறி இருந்தது. நாடக பாணியில் இருந்த சினிமா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இருந்தது. இருந்தாலும் அதற்கும் ஈடுகொடுத்து அப்பொழுதும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார்.
பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணி கனவுகள் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரமான மிலிட்டரி என்கிற கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சொல்லப்போனால் இரண்டாவது கதாநாயகன் மாதிரியான கதாபாத்திரம் தான் சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கோபமான சிவாஜி கணேசன்:
அதில் சிவாஜியின் மொத்த காட்சிகளை எடுக்க அவரிடம் 10 நாட்கள் கேட்டிருந்தார்கள். ஆனால் எட்டு நாட்களிலேயே அந்த படத்தில் சிவாஜி அவருக்கான அனைத்து காட்சிகளையும் நடித்து முடித்து விட்டார். இதனால் பாக்கியராஜ் ”உங்களுக்கான காட்சிகள் எல்லாம் முடிந்து விட்டது சார்” என கூறியுள்ளார்.
ஆனால் சிவாஜி கணேசன் அதை தவறாக புரிந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கான காட்சிகளை நீக்கிவிட்டு நம்மை வீட்டுக்கு அனுப்புகிறான் போல என நினைத்து பாக்யராஜிடம் சண்டை போட்டுள்ளார் சிவாஜி கணேசன்
அதன் பிறகு பாக்யராஜ் படத்தின் திரைக்கதையை எடுத்து வந்து அதில் சிவாஜி கணேசனின் காட்சிகள் அனைத்தையும் காண்பித்து அதை அனைத்துமே ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன எனக் கூறி அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதன் பிறகே சிவாஜி கணேசன் அமைதியடைந்துள்ளார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…