சிவாஜி செய்யாத ஒன்னு!.. அந்த படத்தின் மூலம் நிரூபித்துக்காட்டிய கமல்!..
தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நடிகர்களாக திகழ்பவர்கள் சிவாஜி மற்றும் கமல். இருவருமே நடிப்பின் மூலம் அலாதி பிரியம் கொண்டவர்கள். சினிமாவிற்காக எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் தான் சிவாஜியும் கமலும்.
சிவாஜியின் திரைவாரிசு கமல் என்று சொல்லவில்லை என்றாலும் அதை தான் நடிக்கும் படங்களில் மூலம் கமல் அவ்வப்போது நிரூபித்துக் கொண்டு வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் இவரின் மெனக்கிடுகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.
இதையும் படிங்க : இயக்குனர் செய்த வேலை!.. விக்கி விக்கி அழுது ஆர்ப்பட்டம் செய்த நடிகை தேவிகா.. எதற்காக தெரியுமா?..
மேலும் புதுப்புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எதாவது புதுமையை செய்து கொண்டே வருகிறார் கமல். வெளி நாடுகளில் சினிமா சம்பந்தப்பட்ட நுட்பங்கள் எதாவது அறிமுகம் செய்தால் உடனே அதை இந்தியாவில் அறிமுகம் செய்பவர் கமலாகத்தான் இருப்பார்.
அந்த அளவுக்கு சினிமா துறை மீது வெறித்தனமாக இருப்பவர். சினிமாவின் என்சைக்ளோப்பீடியா என்றே கமலை கூறலாம். மேலும் சிவாஜி ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட் சிவாஜியையே மிரள வைத்திருக்கிறார் கமல். கமல் மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் ‘அபூர்வசகோதரர்கள்’ திரைப்படம்.
இந்த திரைப்படத்தை பார்க்க சிவாஜி ஆனந்தம் தியேட்டருக்கு வந்திருக்கிறார். படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த சிவாஜியை பார்த்து கமல் ‘என்ன சொல்லப் போகிறாரோ?’ என்று திகைத்துக் கொண்டே இருந்தாராம். ஆனால் சிவாஜி கமலை பார்த்து ‘கமலா கணேசன் பண்ணாதத நீ செஞ்சிட்ட’ என்று சொன்னாராம். அந்த அளவுக்கு அந்த படத்தில் கமலின் நடிப்பை பாராட்டியிருக்கிறார் சிவாஜி.