தன் தாயின் முன் சிவாஜிக்கு கிடைத்த உயரிய விருது! பரிசுகளோ பணமோ இல்ல - அங்கதான் நிக்காரு நடிகர்திலகம்

sivaji
Sivaji Ganesan: தமிழ் திரையுலகில் இன்றுவரை நடிப்பிற்கு ஆசானாக இருப்பவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவர் நடித்த படங்கள்தான் அடுத்த இளம் தலைமுறையினருக்கு புத்தகமாக இருந்து வருகின்றன. அந்தளவுக்கு நடிப்பு பல்கலைக் கழகமாகவே இன்றளவும் இருந்து வருகிறார்.
சிவாஜி இல்லாவிட்டாலும் அவரின் தாக்கம் பல பேர் மனதில் இருந்து கொண்டு வருகின்றன. மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் பல பேர் சிவாஜியை தொடாமல் செல்ல முடியாது. அவரின் பேச்சாகட்டும், பாவனைகளாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு தனித்துவம் இருக்கும்.
இதையும் படிங்க: அடிபொலி!.. நைட்டே சம்பவத்தை ஆரம்பித்த லியோ டீம்.. இன்னைக்கு செம கச்சேரி இருக்கு போல!..
எண்ணற்ற கதாபாத்திரங்களை ஏற்று நடித்த சிவாஜிக்கு சம்பூரண ராமாயணம் படம் முக்கியப் பங்கு வகித்தது. இந்தப் படத்தில் சிவாஜி பரதன் வேடம் ஏற்று அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். என்.டி.ராமராவ் ராமராக நடித்திருப்பார்.
1958ல் வெளிவந்த இந்தப் படம் வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.இந்தப் படத்தில் பரதன் வேடமேற்று நடித்த சிவாஜியின் நடிப்பை பார்த்து காஞ்சி பராமாச்சாரியார் சிவாஜியை சந்திக்க வேண்டும் என விரும்பினாராம்.
இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?
உடனே தன் மனைவி, தாய் , தந்தையுடன் சிவாஜி காஞ்சிபுரம் புறப்பட்டாராம். இவர்கள் வந்ததை பற்றி காஞ்சி பராமாச்சாரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே வந்த பராமாச்சாரியார் சிவாஜியையே உற்று நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
உடனே சிவாஜியின் அம்மாவிடம் ‘இந்தப் பிள்ளையை பெற்றதற்கு நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேம்’ என சொல்லிவிட்டு அவர்களை ஆசிர்வாதம் செய்தாராம்.
இதையும் படிங்க: மீசைய வளிச்சி விஜயகாந்த் படத்தில் வாய்ப்பு வாங்கிய சரத்குமார்!.. நாட்டாமை செம கில்லாடி!..
அவர் முன் எதுவும் பேசமுடியாதவராய் நின்ற சிவாஜி தன் அன்னையை பார்த்தாராம். அவரின் தாயின் கண்களில் இருந்து விவரிக்க முடியாத மகிழ்ச்சி அவர் கண்ணீராய் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டு சிவாஜி இதுதான் எனக்கு கிடைத்த பெரிய விருது என எண்ணி மகிழ்ந்தாராம்.