நடிப்பில் கல்லா கட்டிய நடிகர் திலகமே பயப்படும் நடிகை... இதனால் தான் இப்படியா?
தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் நாயகனை போல நாயகிகளும் முக்கிய வேடம் தான் ஏற்று வந்தனர். அதில் சில நடிகைகள் அப்போதைய டாப் ஸ்டார்களுக்கே டப் கொடுத்தனர். அப்படி ஒரு முக்கிய நடிகை சிவாஜி கணேசனே பயம் கொள்ளும் அளவு நடித்தார் எனக் கூறப்படுகிறது.
பாசமலர், மிஸ்ஸியம்மா, திருவிளையாடல், களத்தூர் கண்ணம்மா என ஹிட் லிஸ்ட் படங்களினை தனது திரை வாழ்க்கையில் கொண்டவர் சாவித்திரி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கன்னடம், இந்தி மற்றும் மலையாள படங்களிலும் பணியாற்றியுள்ளார். 250க்கும் அதிகமான படங்களில் நடித்த சாவித்திரி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்தார். தெலுங்கு ரசிகர்கள் அவரினை மகாநதி என்றும், தமிழில் ரசிகர்கள் அவரை நடிகையர் திலகம் என அழைத்தனர்.
இத்தனை சிறப்பினை பெற்ற சாவித்திரியை பார்க்கும் போது அவரின் போட்டி நாயகிகளான பத்மினி, சரோஜாதேவி ஆகியோர் சற்று பயப்படவே செய்வார்களாம். அவர்கள் மட்டுமல்லாது நடிகர் திலகம் சிவாஜியே அவரின் நடிப்பை பார்த்தால் சற்று பயத்துடனும் கவனமாகவும் நடிப்பேன் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகையர் திலகம் என்ற பெயரில் இவரின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வெளிவந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாகிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.