500 ரூபாய் சம்பளத்துக்கு வேறு நடிகருக்கு குரல் கொடுத்த சிவாஜி!.. அதுதான் முதலும் கடைசியும்!..

Sivaji : எம்.ஜி.ஆரைப் போலவே சிறு வயது முதல் நாடகங்களில் நடிக்க துவங்கியவர்தான் சிவாஜி. பல வருடங்கள் மேடை நாடகங்களில் பல்வேறு வேஷங்களையும் போட்டு நடித்திருக்கிறார். பல நாடகங்களில் பெண் வேடத்திலும் நடித்தார். பராசக்தி படம் உருவானபோது அப்படத்தை தயாரித்த சிவாஜியின் குரு பெருமாள் முதலியார் அப்படத்தில் சிவாஜிதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
படமும் துவங்கியது. எடுத்த காட்சிகளை போட்டுப்பார்த்த ஏவி மெய்யப்ப செட்டியார் சிவாஜியை தூக்கிவிட்டு வேறு நடிகரை போட்டு படம் எடுக்கலாம் என சொல்ல பெருமாள் முதலியார் கேட்கவில்லை. பராசக்தி படத்தை பெருமாள் முதலியாரோடு சேர்ந்து ஏவி மெய்யப்ப செட்டியாரும் தயாரித்தார்.
இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. முடியாம போச்சி!.. இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் நடிகை…
படம் வெளியான பின் படத்தில் இடம் பெற்ற வசனங்களாலேயே இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பல பகுத்தறிவு வசனங்களை கலைஞர் கருணாநிதி எழுதியிருந்தார். அப்போதெல்லாம் ஒரு படத்தில் 20க்கும் மேற்பட்ட பாடல்கள் இடம் பெறும். அதை உடைத்தது பராசக்தி படம்தான்.
எனவே, இந்த படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்தது. படம் வெளியான தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இந்த படத்தின் வெற்றியால் ஒரே நேரத்தில் 15 படங்களுக்கும் மேல் நடிக்க ஒப்பந்தம் ஆனார் சிவாஜி. அதன்பின் அவரின் ஓட்டம் நிற்கவே இல்லை.
இதையும் படிங்க: சிக்கலில் தவித்த சிவாஜி படத்திற்கு தானாக முன்வந்து உதவிய பிரபலம்!.. அதுக்கான காரணம் தெரியுமா?..
பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நடிகர் திலகமாகவே மாறி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சிவாஜி கணேசன். சிவாஜி தனது திரைவாழ்வில் ஒரே ஒருமுறை மட்டும்தான் வேறு நடிகர் ஹீரோவாக நடித்த படம் ஒன்றில் டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். அதுவும் பராசக்தி படம் வெளியாவதற்கு முன்பு.
சிவாஜியின் நாடக குரு பெருமாள் முதலியார் தெலுங்கில் உருவான ஒரு படத்தை அப்படியே தமிழில் டப் செய்து வெளியிட்டார். அதில் ஒரு நடிகருக்கு சிவாஜியை குரல் கொடுக்க சொன்னார். அதற்கு அவர் சிவாஜிக்கு கொடுத்த சம்பளம் ரூ.500. அதுதான் வேறு நடிகருக்கு நடிகர் திலகம் சிவாஜி குரல் கொடுத்த முதலும், கடைசியுமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!