More
Categories: Cinema History Cinema News latest news

நான் சினிமாவிற்கு வந்தப்போ சிவாஜி ரொம்ப கஷ்டப்பட்டார்!.. ரகசியத்தை உடைத்த பாக்கியராஜ்…

1979 ஆம் ஆண்டு வெளியான புதிய வார்ப்புகள் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் இயக்குனர் பாக்கியராஜ். ஒரு கதாநாயகனாகவும், இயக்குனராகவும் பாக்கியராஜ் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றியை கொடுத்துள்ளார்.

அவர் இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்த பாண்டியராஜ், பார்த்திபன் போன்றோர் பின்னர் பெரும் பிரபலமானார்கள். எனவே எப்போதும் பாக்கியராஜுடம் உதவி இயக்குனராக சேர்வதற்காகவே ஒரு கூட்டம் காத்து கிடந்தது.

Advertising
Advertising

SHIVAJI

தினமும் பாக்கியராஜ் அலுவலக வாசலில் ரயில் போல கூட்டம் நிற்கும் என அப்போது பாக்கியராஜுடன் பழக்கத்தில் உள்ளவர்கள் கூறுவதுண்டு. பெரும் இயக்குனரான பிறகு சிவாஜி கணேசனுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார் பாக்கியராஜ்.

எனவே அவர் இயக்கிய தாவணி கனவுகள் திரைப்படத்தில் சிவாஜிக்கு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார் பாக்கியராஜ். அந்த பட அனுபவங்கள் குறித்து அவர் கூறும்போது சிவாஜி கணேசன் குறித்த சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

சிவாஜிக்கு வந்த கஷ்டம்:

ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் இருந்து கலர் சினிமாவிற்கு மாறிய பிறகு சினிமாவில் பல தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது. அந்த வளர்ச்சிக்கு ஈடுக்கொடுக்க முடியாமல் நடிகர்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை விட்டனர். ஆனால் சிவாஜி கணேசன் அப்போதும் நடித்து கொண்டிருந்தார்.

அப்போதெல்லாம் சினிமாவில் தனியாக டப்பிங் இருக்காது. படம் எடுக்கும்போதே அவர்கள் பேசுவதையும் ரெக்கார்ட் செய்துவிடுவார்கள். ஆனால் சினிமா வளர்ந்த பிறகு டப்பிங் தனியாக செய்யும் முறை வந்தது. இந்த முறை வந்த பிறகு சிவாஜி மிகவும் கஷ்டப்பட்டார்.

தாவணி கனவுகள் திரைப்படத்தில் கூட பல காட்சிகளுக்கு அவரால் சரியாக டப்பிங் செய்ய முடியவில்லை. ஆனாலும் அவற்றை எல்லாம் சமாளித்து பல வருடங்கள் தமிழ் சினிமாவில் இருந்தார் சிவாஜி என சிவாஜி குறித்து கூறியுள்ளார் பாக்கியராஜ்!..

இதையும் படிங்க: தமிழில் வந்த ஹிட் படத்தை, டொக்கு படமாக்கிய சரத்பாபு மனைவி!.. மொத்த காசும் காலி!..

Published by
Rajkumar