அடுத்தடுத்து ரெண்டு கல்யாணம்...அசால்ட்டா சமாளித்த சிவாஜி...இது தெரியாம போச்சே!..
தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர்கள் நடிகர் சிவாஜி மற்றும் நடிகை பத்மினி. பத்மினியும் சிவாஜியும் கிட்டத்தட்ட இணைந்து 39 படங்கள் நடித்துள்ளனர். முதன் முதலில் இவர்கள் ஜோடி சேர்ந்த படம் ‘பணம்’.
இந்த படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் தில்லானா மோகனாம்பாள் படத்தை கூறலாம். தான் நடித்த இரண்டாவது படத்திலேயே சிவாஜி பத்மினியுடன் ஜோடி சேர்ந்தார் .
இதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் பணம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சிவாஜிக்கு திருமணம் நடந்திருக்கிறது. அதுவும் எப்படி பட்ட சூழ்நிலையில் என்றால் மறு நாள் சிவாஜியின் திருமணம், முதல் நாள் வரை இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் இருந்திருக்கிறாராம் சிவாஜி.
மேலும் இந்த படத்திலும் பத்மினியுடன் திருமணம் நடக்கும் காட்சியை தான் படமாக்கியிருக்கின்றனர். பத்மினிக்கு தாலி கட்டி வீட்டில் விடும் வரை காட்சியை படமாக்கியிருக்கின்றனர். இந்த காட்சியை முடித்துக் கொடுத்துவிட்டு தனது திருமணத்திற்காக சென்றிருக்கிறார் சிவாஜி. அங்கு அவருக்கு கமலாம்பாளுடன் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தகவலை சித்ரா லட்சுமணன் பத்மினியை பற்றி கூறும்போது சிவாஜி திருமணத்தை பற்றியும் கூறினார்.