சிவாஜிக்கு பிடித்த விஜய் படம்!..படத்தை பார்த்துவிட்டு என்ன செய்தார் தெரியுமா?...
![sivaji_main_cine sivaji_main_cine](http://cinereporters.com/wp-content/uploads/2022/10/sivaji_main_cine-3.jpg)
தமிழ் சினிமாவில் நடிகர் சிவாஜிக்கும் நடிகர் விஜய்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு பேரின் பெயரின் முன் நடிகர் திலகம், இளைய தளபதி என்ற அடைமொழியை கொடுத்தது ஒரு ரசிகர் தான். சிவாஜியின் நடிப்பை பார்த்து ஒரு நாளிதழில் ரசிகர் ஒருவர் கொடுத்த அடைமொழி தான் நடிகர் திலகம் ஆகும்.
அதே போல் விஜய் ஹீரோவாக நடித்த இரண்டாவது படத்தை பார்த்து அவரது ரசிகர் சொன்ன அடைமொழி தான் இளைய தளபதி என்பதாகும். இந்த அடைமொழி விஜய்க்கு மிகவும் பிடித்துப் போகவே தன்னுடைய ரசிகன் படத்தில் இருந்து தன் பெயருக்கு முன் இளைய தளபதி என்று சேர்த்துக் கொண்டார்.
இதையும் படிங்க : இப்பவும் கட்டழகு தாறுமாறாத்தான் இருக்கு!…சினேகாவை வர்ணிக்கும் புள்ளிங்கோ….
அது மட்டுமில்லாமல் நடிகர் விஜய் குழந்தை நட்சத்திரமாக நான்கு ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெற்றி என்ற படத்தை பார்த்திருக்கிறார் நடிகர் திலகம் சிவாஜி. அந்த படத்தில் விஜயின் நடிப்பு மிகவும் பிடித்து போய்விட்டதாம் சிவாஜிக்கு.
பிடித்தது மட்டுமா அந்த படத்தில் அவரின் நடிப்பை பாராட்டி விஜய்க்கு பரிசாக 500 ரூபாயை கொடுத்திருக்கிறார் சிவாஜி. இந்த பிணைப்பால் எப்படியாவது சிவாஜியுடன் நடித்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினால் விஜயும் சிவாஜியும் சேர்ந்து ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடித்தனர். அதுக்கு காரணமாக இருந்தவர் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர்.