சிவாஜி வைத்திருந்த 100 பவுன் எடையுடைய பேனா!.. யாரிடம் கொடுத்தார் தெரியுமா?..
தமிழ் சினிமாவில் எத்தனையோ கொடைவள்ளல்களை பார்த்திருப்போம். அதுவும் பல பேருக்கு தெரிந்தவர்கள் யாரென்றால் நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவருக்கு அடுத்தபடியாக எம்ஜிஆர். இவர்களை தான் தமிழ் சினிமாவின் மாபெரும் கொடைவள்ளல்களாக கண்டிருக்கிறோம்.
ஆனால் நிறைய பேருக்கு தெரியாத மாபெரும் கொடைவள்ளலாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவரின் தானதர்மத்தை அறியாதவர்கள் பலபேர் இருக்கின்றனர். இவர் எப்படி பட்ட நிலையில் எந்த மாதிரியான உதவிகளை வழங்கியிருக்கிறார் என்று இவரை பற்றி ஒரு ஆராய்ச்சி நூலே வெளிவந்திருக்கிறது.
இதையும் படிங்க : சிம்பு தாய்லாந்து போனதின் ரகசியம் இதுதானா?? வெறித்தனமா இறங்கி ஆட தயாராகும் ATMAN…
அதுதான் இப்பொழுது மிகவும் டிரெண்டாகி வருகிறது. கிட்டத்தட்ட அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து 40 ஆண்டுகளில் 310 கோடிக்கும் மேலாக தான தர்மங்களை செய்திருக்கிறாராம். மேலும் பாகிஸ்தான் போருக்காக தன்னிடம் இருந்த 100 பவுன் எடையுடைய பேனாவை கொடையாக கொடுத்திருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் தன்னிடம் இருந்த 450 பவுன் நகையையும் தானமாக வழங்கியிருக்கிறார். தன்னுடைய கடைசி காலங்களில் யானைகளையும் தானமாக வழங்கினாராம். மேலும் ஒரு யானைப் பாகன் எனக்கும் என் யானைக்கும் சாப்பிட வழியில்லை என்று சிவாஜியிடம் சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க : என் சந்தோஷம் எல்லாத்தையும் கெடுத்திட்டீங்க!.. பாலசந்தரிடம் சண்டையிட்ட ரஜினி!..
அதற்கு சிவாஜி 2 ஏக்கர் நிலத்தை கொடுத்து அந்த யானைப்பாகனிடம் இதில் விவசாயம் பார்த்துக் கொள் மேலும் யானைக்கும் ஏதாவது சாப்பாடு போடு என்று பட்டா செய்து கொடுத்து நிலத்தை வழங்கியிருக்கிறார். இதுவரை இதைப் பற்றி வாய் திறக்காத சிவாஜி ஒரு கொடை வள்ளலாகவே வாழ்ந்திருக்கிறார். தான தர்மம் செய்வது ஒர் மனிதனின் தவம் என்பதில் உறுதியாக இருந்தவர் சிவாஜி.