தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருந்தவர்கள் அந்தக் காலத்தில் எம்ஜிஆரும் சிவாஜியும். இருவருக்கென்று தனி மரியாதையும் மதிப்பும் இருந்தது. இருவர் படப்பிடிப்பும் மயான அமைதியாகவே இருக்குமாம். அந்த அளவுக்கு இவர்களின் மீது மரியாதை வைத்திருந்தனர். மேலும் எம்ஜிஆருக்கு பணியாற்றுபவர்கள் சிவாஜிக்காக பணியாற்ற மாட்டார்கள் அதே போல சிவாஜிக்காக பணியாற்றியவர்கள் எம்ஜிஆருக்கு பணியாற்ற மாட்டார்கள் என்ற ஒரு வழக்கமும் இருந்து வந்தது.
அதையே தான் இருவரும் விரும்பினர். ஆனால் இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்புறவு இருந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் மலையாளத்தில் 1982 ஆம் ஆண்டு வெளியான படம் ‘போஸ்ட் மார்ட்டம்’. இந்த படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தனர். அதில் நடிகர் ஜெய்சங்கரை நடிக்க வைக்க முதலில் முடிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் சில பேர் சிவக்குமார் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு புரடக்ஷனில் வேலைபார்த்தவர் பிரபல தயாரிப்பு நிர்வாகியான கஃபார் ஆவார். இந்த செய்தியை அறிந்து கொண்டு ஏ.எல். அழகப்பன் கஃபாரை சந்தித்திருக்கிறார்.
சந்தித்து ‘ நீங்கள் போஸ்ட் மார்ட்டம் படத்தை தமிழில் எடுக்க இருப்பதாக கேள்விப்பட்டேன், அந்த படத்தில் அண்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என சிவாஜியை கூறியிருக்கிறார்.’ அதை கேட்டதும் கஃபாருக்கு மிகவும் சந்தோஷமாம். ஒரு லெஜெண்ட் நம்மை தேடி வருகிறாரே என்று அவரும் சரி என சம்மதித்து விட்டாராம்.
அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பை இயக்குனர் ஏ. ஜெகந்நாதனிடம் விடும்படி ஆர்.எம்.வீரப்பன் அமைந்த கூட்டணி ஒன்று சொல்லியிருக்கிறது. ஆனால் கஃபாருக்கு அதில் உடன்பாடு இல்லையாம். ஏனெனில் ஏ. ஜெகந்நாதன் எம்ஜிஆரின் ஏராளமான படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவராம். அதனால் இதை கேட்டு சிவாஜி ஏதும் சொல்வாரோ என்ற தயக்கம் இருந்ததாம். ஆனால் சிவாஜி அதை பற்றி ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டாராம்.
அதன் பிறகு தான் படம் டேக் ஆஃப் ஆகியிருக்கிறது. அந்தப் படம் தான் ‘வெள்ளை ரோஜா’. இந்தப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பர். சிவாஜி, பிரபு, ராதா, அம்பிகா என பெரும் நட்சத்திரங்கள் உள்ள இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருப்பார். இந்த சுவாரஸ்ய தகவலை கஃபாரே ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : கலைவாணருக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஆர்.ராதா செய்த துணிகர காரியம்… வாயை பிளந்த சக நடிகர்கள்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…