சிவாஜியை நேரில் கண்டதும் தவியாய் தவித்த சிங்கள ரசிகர்கள்...இவ்ளோ பாசத்தை வச்சிருக்கீங்களே...!
இந்தியாவும் இலங்கையும் இணைந்து கூட்டுத்தயாரிப்பில் சிவாஜியை வைத்து ஒரு படம் எடுத்தது. படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று சக்கை போடு போட்டு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு பிரபல தொழில் அதிபருடன் சேர்ந்து முதல் முறையாக இந்திய இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாக ஒரு படம் தயாரிக்க விரும்புகிறோம். படம் முழுக்க இலங்கையில் எடுக்கப்பட வேண்டும். இது இந்திய, இலங்கை நட்புக்கு ஒரு பாலமாக அமையும்.
முக்கியமான ஒரு படமாகவும் இருக்கப் போகிறது. இதோ இப்போதே தீர்மானித்து விடுவோம்.
நீங்கள் தான் எங்கள் டைரக்டர். நீங்களே ஒரு நல்ல கதையைச் சரிபார்த்து, தகுதியான தொழில்நுட்பக் கலைஞர்களோடும், தமிழ்நாட்டு நட்சத்திரங்களோடும் படத்தை ஆரம்பியுங்கள்.
ஆனால், இலங்கையில் செயல்பட வேண்டும் என்றார். நான் திகைத்துப் போய் யோசிக்க ஆரம்பித்தேன். அவர்கள் யோசனையை படமெடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் பாஸ்போர்ட் இருப்பது, நீங்கள் வெளிநாடு சென்று வந்தவர் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.
எங்கள் தங்கை பரிமளாவும், அத்தான் ராமச்சந்திரனும் வெளிநாடுகளில் இருந்து வந்தனர். அவர் பெரிய வங்கி அதிகாரி. அவர்களைக் காண நான் குடும்பத்தோடு சென்று வருவேன்.
இப்போதே உங்கள் குடும்பப் பாஸ்போர்ட்டை எங்களிடம் கொடுங்கள். நாங்கள் நாளைக்கே இலங்கை செல்ல விசா வாங்கி விடுகிறோம். நாளைக்கு அடுத்த நாள் இலங்கை செல்கிறோம். பாகஸ்தரைக் கண்டு பேசுகிறோம். வேறு ஏற்பாடுகளும் செய்கிறோம். டிக்கெட் எடுத்தாகிவிட்டது என்றார்கள். வாழ்க்கைப்படகு இலங்கையை நோக்கித் திசை மாறிச் சென்றது.
நான் சொன்னதைப் போல வாய்ப்பும், நேரமும், மனமும் ஒன்றாகச் சேர்ந்து ஆண்டவன் கட்டளை பிறந்தது. விமான நிலைய வரவேற்போடு ஸ்ரீலங்காவில் பாதம் பதித்தேன். நான் எதேச்சையாகப் பிரபல நாடகாசிரியர் வெங்கட் எழுதிய நாடகத்தைப் பார்த்தேன். மெழுகுப் பொம்மைகள் என்று தலைப்புக் கொடுத்திருந்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அதனால் இதை நானே சொந்தத் தயாரிப்பில் படமாக்க வேண்டும் என்று வாங்கினேன். படமாக எடுத்தால் என் நண்பர் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தே அந்த நாடகத்தை வாங்கியிருந்தேன்.
பெரிய பொறுப்பில் இருந்த ஒரு அதிகாரிக்கு, காதல் மனைவி இறந்த பிறகு தெரிகிறது. அவரது 3 குழந்தைகளில் ஒன்று அவர் குழந்தை இல்லை என்பது. சிக்கலான ஒரு புதிர்..!
அதை விடுவிப்பதில் மக்களின் ஆர்வத்தைத் தூண்டி என் திறமையைக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதுதான் பைலட் பிரேம்நாத் என்ற படம். இதுதான் கூட்டுத் தயாரிப்புப் படம். 1978ல் வெளியான இந்தப் படத்தை டி.எம்.மேனன், சினி இந்தியா புரொடக்ஷன்ஸ், சலீம் ஆகியோர் தயாரித்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
சிவாஜிகணேசன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ், ஸ்ரீதேவி, மனோரமா, ஜெயசித்ரா, சிங்கள நாயகி மாலினி பொன்சேகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
சிவாஜியை நேரில் கண்டதும் அங்குள்ள தமிழர்கள் தம் கண்களையே நம்ப முடியாமல் தவித்தனர். சிங்கள நாயகி மாலினி சிவாஜியின் காதலியாக நடித்தார். படம் வரலாறு காணாத வெற்றி பெற்றது.