Connect with us

Cinema History

கண்ணதாசன் எழுதிய பாடலுக்காக சூட்டிங் வராமல் ரெண்டு நாள் பிராக்டிஸ் செய்த சிவாஜி

ரொம்பவும் கூரிய பார்வை கொண்ட இவரது வசனங்களும் ஷார்ப்பாகவே இருக்கும். டிப்டாப் ஆசாமியாகவே பல படங்களில் வந்து அசத்துவார். அவர் தான் நடிகர் ராஜீவ்.

நடிகர் ராஜீவ் மதுரையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராஜசேகர். பாலசுப்பிரமணிய முதலியார், ராஜேஸ்வரி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் வளர்ந்தது எல்லாம் பெங்களூருவில் தான்.

Actor Rajeev

இவரது மனைவியின் பெயர் ராணி. கிரண் சூர்யா, மீனா காமாட்சி என்று இரு பிள்ளைகள் உள்ளனர். திரைக்கு வரும் முன்னர் சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பணியாற்றியுள்ளார்.

இவர் முதலில் திரைத்துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாகத் தான் பணியாற்றினார். 1980ல் வெளியான ஒரு தலை ராகம் படத்தில் நடிகர் ரவீந்தருக்கு டப்பிங் கொடுத்தவர் இவர் தான். இதுதான் இவருக்கு முதல் படம். இவர் நடித்த முதல்படம் ரயில் பயணங்களில்.

டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1981ல் வெளியானது. தொடர்ந்து இயக்குனர் கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்தார். பெங்கியவல்லி அரவிட ஹீவு என்ற அந்தப் படத்தில் தமிழில் ஜெய்கணேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப்படம் 1983ல் வெளியானது. குடிகார அண்ணன் கேரக்டரில் நடித்து அசத்தினார்.

இவர் நடித்த பல தமிழ்ப்படங்கள் ஹிட் அடித்துள்ளன. வில்லன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் சிவப்பு மழை. இது 2010ல் வெளியானது. வெள்ளிவிழா நாயகன் என்று தான் இவர் அழைக்கப்பட்டார்.

இவர் நடித்த படங்கள் எல்லாம் வெள்ளிவிழா தான். ஆடிவெள்ளி படத்தில் இவர் நடித்த வில்லத்தனமான வேடத்தை மறக்கவே முடியாது. 2008ல் டிஎம்எஸ்சின் விழா ஒன்றில் இவர் இவ்வாறு பேசினார்.

டிப்ளோமோ இன் பிலிம் ஆக்டிங் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். நான் ரஜினிக்கு ஜூனியர்னு பெருமையா சொல்றேன். நடிப்பு ஏன் சொல்லித்தரணும். எம்ஜிஆர், சிவாஜி எங்களுக்கு இரண்டு கண்கள் மாதிரி.

Saanthi movie

அதுக்கு பேக் போர்ன் யாருன்னா டிஎம்எஸ் தான். அப்போ இன்ஸ்டிட்யூட்ல நீ சந்தோஷமா வெளிய இருந்து வர்றடா. உங்க அப்பா செத்துப் போயிட்டாங்க. நீ நடின்னு சொல்வாங்க. அப்பல்லாம் கிளிசரின் கிடையாது.

என்ன பண்றது? அந்த நேரத்துல நடந்ததை சொல்றேன். தங்கப்பதக்கத்துல ஒரு அருமையான சீன். ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுப்பாங்க. டிஎம்எஸ் சாரோட சோகமான பாட்டு… சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்…என்ற பாட்டைப் பாடுவேன். கண்ணீர் வரும்.

Kannadasan and TMS

சாந்திங்கற படத்தில் அருமையான சிட்டியுவேஷன். யார் அந்த நிலவுங்கற சாங். அது வந்து கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி. மியூசிக் எல்லாம் போட்டுட்டு டிஎம்எஸ் சார் தூள் கிளப்பிட்டாரு. அடுத்த நாள் கேசட் எல்லாம் ஆர்டிஸ்ட்டுக்குப் போயிடும்.

எம்ஜிஆர், சிவாஜி எல்லாம் டெடிகேட்டட். அதுக்குன்னே பிறந்தவங்க. வாழ்ந்தவங்க. அந்த சாங் கேசட் அங்க போனதுக்கு அப்புறம் அடுத்த நாள் சூட்டிங் வரும்போது காலங்காத்தால 7 மணிக்கு சூட்டிங்னா சிவாஜி சார் 6 மணிக்கெல்லாம் அங்க உட்கார்ந்துருவாரு. ஆனா வரவே இல்ல.

Sivaji 2

எல்லாரும் வெயிட் பண்ணிப் பார்த்தாங்க. ஏழரையாச்சு. எட்டாச்சு. சூட்டிங் கேன்சல் பண்ணிட்டாங்க. அடுத்தநாள் 7 மணி சூட்டிங்க 9 மணியாக மாற்றுனாங்க. அன்னைக்கும் அவரு வரவே இல்லை. எல்லாம் அப்செட். இது நடந்த கதை. அன்னைக்கும் சூட்டிங் கேன்சல். இது மாதிரி சிவாஜி சார்லாம் செஞ்சதே இல்ல. என்னன்னு சொல்லி புரொடியூசர் சார் ஃபீல் பண்ணினாரு.

பாட்டு கீட்டு சரியில்லையா…என்னன்னு தெரியலயே… அப்படின்னு பேசி அடுத்தநாள் எம்எஸ்வி சார், கண்ணதாசன், புரொடியூசர் எல்லாரும் வீட்டுக்குப் போனாங்க. அப்போ சண்முகம் சார் வந்தாங்க. என்ன திடீர்னு…இல்ல. சிவாஜி அண்ணனை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம். சரி…கூப்பிடுறேன்னாரு. அப்புறமா சிவாஜி சார் வந்தாரு.

என்னடா திடீர்னு.. என்னண்ணே பாட்டு சரியில்லையா…ரெண்டு நாள் சூட்டிங் கேன்சல் ஆகி புரொடியூசர் அப்செட்டாயிட்டாரு…செட் எல்லாம் போட்டுட்டு… அடப்பாவிகளா…யார்றா சொன்னா? அழகான பாட்டை எழுதி வச்சி கண்ணதாசன் தூள் கிளப்பிட்டான்.

நீ மியூசிக் போட்டு கொன்னுட்டே…டிஎம்எஸ்ச கேட்கணுமா…அவனை சாப்பிடுறதுக்காகவாவது நான் வந்து பிராக்டிஸ் பண்ணனும்லாடா…நான் பிராக்டிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்டா…அந்த டெடிகேஷன் அப்ப கிடையவே கிடையாது.

google news
Continue Reading

More in Cinema History

To Top