அல்வா போல கிடைத்த வேடம்!.. அசால்ட் செய்த நடிகர் திலகம்!.. அட அந்த படமா?!..
சிவாஜி படத்தில் எப்போதுமே ஓவர் ஆக்டிங் இருக்கும் என்று சொல்வார்கள். அவர் எப்படி நடித்தாலும் சூப்பராகத் தான் இருக்கும். ஆனால் அவர் இயல்பாக ஓவர் ஆக்டிங்கே இல்லாமல் நடித்த படமும் வந்துள்ளது. என்ன படம் என்று பார்ப்போமா...
நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வியட்நாம் வீடு. இதில் நடிகர் திலகம் சிவாஜி பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டியிருப்பார்.
ஒவ்வொரு ரசிகனும் சினிமாவுக்குள் வாழ்க்கைக்கான பாதையைத் தேடிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது நடுத்தர குடும்பத்தின் எண்ண ஓட்டத்தை யதார்த்தமாக சொன்னார் இயக்குனர் மாதவன். இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியவர் சுந்தரம். இந்தப் படத்திற்குப் பிறகு தான் அவர் வியட்நாம் வீடு சுந்தரம் என்றே அழைக்கப்பட்டார்.
கௌரவம், மரியாதை, கம்பீரம் என்ற அடையாளத்துடன் பிரெஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்திருப்பார் சிவாஜி. இந்தப் படத்தின் கேரக்டர் அவருக்கு திருநெல்வேலி அல்வா சாப்பிடுவது போல இருந்ததாம்.
வீட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று விவாதம் நடக்கிறது. எப்போதும் சண்டையும் சச்சரவுமாக இருந்ததால் வீட்டிற்குப் பெயரே வியட்நாம் வீடு என்று வீட்டின் தலைவர் வைத்துவிடுகிறாராம்.
இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஒரு இடத்தில் கூட மிகையான நடிப்பே கிடையாது. எல்லாமே யதார்த்தமான நடிப்பு தான். 70களில் அப்பாக்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய படமும் இதுதான். இப்படி இந்தப் படத்திற்குப் பல பெருமைகள் உண்டு.
சிவாஜிக்கு ஜோடியாக நடித்த பத்மினியின் நடிப்பும் அருமையாக இருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் எல்லாமே மாஸ் ரகங்கள். இந்தப் படத்தில் சிவாஜி, பத்மினி ஜோடியுடன் இணைந்து நாகேஷ், தங்கவேலு, ஸ்ரீகாந்த், விஎஸ்.ராகவன், பானுமதி, விஜயன், சுப்பையா, எஸ்.வி.ராமதாஸ், வி.கோபாலகிருஷ்ணன், செந்தாமரை, பக்கோடா காதர் உள்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
சுந்தரம் எழுதிய வியட்நாம் வீடு என்ற நாடகம் தான் படமானது. படத்தில் பாலக்காட்டு பக்கத்திலே, உன் கண்ணில் நீர் வழிந்தால் ஆகிய பாடல்கள் பிரமாதம்.