வில்லனாக நடித்த நடிகர் திலகத்தை அலார்ட் ஆக்கிய ரசிகர்கள்... நடந்தது இதுதான்!..
நடிகர் திலகம் சிவாஜி இதுவரை ஹீரோவாக நடித்த படங்கள் தான் நமக்குத் தெரியும். ஆனால் இவர் வில்லனாகவும் பல படங்களில் நடித்துள்ளார். அதாவது நெகடிவ் கேரக்டரில் என்று சொல்லலாம். அப்படி என்னென்ன படங்கள் நடித்தார்னு பார்க்கலாமா...
சிவாஜியைப் பொருத்தமட்டில் அவர் எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர். சுதந்திரப்போராட்ட வீரராக இவர் நடித்த பல படங்கள் செம மாஸானவை. குடும்பக்கதை அம்சம், காவல்துறை அதிகாரி, பணக்காரர், டாக்டர், விவசாயி, தொழிலாளி என்று இவர் எத்தனையோ விதமான வேடங்களில் நடித்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் நெகடிவ் கேரக்டரிலும் இவர் சில படங்களில் நடித்துள்ளார்.
1953ல் வெளியான திரும்பிப்பார் படத்தில் பரந்தாமன் கேரக்டரில் வில்லனாக நடித்தார். 1954ல் வெளியான துளி விஷம் படத்தில் சூரியகாந்தன் கேரக்டரில் சிவாஜி வில்லனாக நடித்தார். 1954ல் அந்த நாள் படத்தில் ராஜன் என்ற நெகடிவ் கேரக்டரில் நடித்துள்ளார். இது பாடல்களே இல்லாமல் வந்த முதல் படம். 1956ல் அண்ணாத்துரை எழுதிய நாவல் படமாக்கப்பட்டது. அந்தப் படம் தான் ரங்கோன் ராதா. இதிலும் சிவாஜி நெகடிவ் ரோலில் நடித்துள்ளார்.
உதாரணமாக ஒரே ஒரு படத்தைச் சொல்வோம். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு உள்பட பலர் நடித்த படம் உத்தமபுத்திரன். இதில் விக்ரமன், பார்த்திபன் என்று இரட்டை வேடங்களில் சிவாஜி நடித்திருப்பார். அதில் விக்கிரமன் கதாபாத்திரம் தான் வில்லன் வேடம். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி இறந்து விடுவார்.
இந்தப் படம் 100 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தில் தான் சிவாஜி முழுவில்லன். கதாநாயகனாகவே நடித்த சிவாஜி இந்தப் படத்தில் வில்லனாக நடித்ததும் ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்தாராம். அதன்பின்பு சுதாரித்துக் கொண்ட சிவாஜி இதுபோன்ற வில்லன் கெட்டப் படங்களில் நடிக்கவே இல்லையாம்.
அதே போல சிவாஜி பல படங்களில் நெகடிவ் கேரக்டரில் நடித்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் அது நல்லதுக்காகத் தான் என்று காட்டி விடுவார்கள். நவராத்திரி படத்தில் கூட ஒரு வேடத்தில் திருடனாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் சிவாஜி 9 வேடங்களில் வந்து அசத்துவார்.