தமிழ் சினிமாவில் நடிப்பில் மும்மூர்த்திகளாக வலம் வந்தவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன். இந்த மூவரும் மூவேந்தர்களாக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்தனர். அதேபோல ஒரு பாடல் முற்றுப்பெற வேண்டும் என்றால் அதற்கு இசை, வரி மற்றும் குரல் என இம்மூன்றும் அவசியமாகும். அந்த வகையில் ஒரு பாடலுக்கு மூவேந்தர்களாக இருந்தவர்கள் கண்ணதாசன், எம் .எஸ் .விஸ்வநாதன் மற்றும் டி .எம் .சௌந்தரராஜன்.
ஒரு சமயம் இவர்களுக்குள் ஒரு போட்டி நடந்து கொண்டு இருந்ததாம் .அப்போது அவர்களுக்கு இடையே கடும் விவாதமும் ஏற்பட்டிருக்கிறது. கண்ணதாசன் சொன்னாராம் “நான் இருக்கேனோ இல்லையோ நூறு வருடங்கள் ஆனாலும் கண்ணதாசனைப் போல் எந்த கொம்பனாலும் இனிமேல் இந்த தமிழ் சமுதாயத்தில் பாட்டை எழுத முடியாது” என கூறினாராம்.
அதற்கு எம். எஸ். வி சொன்னாராம் “அண்ணே சரிதானே. நீங்க சொல்றது எல்லாம் சரி. ஆனால் இந்தப் பாட்டுக்கு இசையமைக்க என்னை தவிர இன்னொருவன் பிறக்கத்தான் வேண்டும் என இதே தமிழ் சமுதாயம் சொல்லும் என சொன்னாராம்.
உடனே பக்கத்தில் இருந்த டி .எம் சௌந்தரராஜன் சொன்னாராம் “உங்களுடைய இசை ஆகட்டும், அவருடைய வரிகள் ஆகட்டும் இரண்டையும் சேர்த்து மூச்சரைக்க பாடுகிறவன் நான்தான். உயிரைக் கொடுத்து பாடுகிறவன் நான்தானே, அப்பதானே பாட்டு நீக்கும்” என சொன்னாராம்.
உடனே பக்கத்தில் இருந்த ஒருவர் அருகில் இருந்த சிவாஜியை பார்த்து “அவர்கள் மூவரும் இப்படி போட்டி போட்டுக் கொள்கிறார்களே? நீங்கள் ஏதும் சொல்லவில்லையா ?”எனக் கேட்டாராம் .அதற்கு சிவாஜி சொன்னாராம் “அவர்கள் அனைவரும் சொல்றது சரிதான். ஆனால் அந்த மூன்றையும் ஒன்று சேர்த்து ஸ்கிரீனில் நடிப்பாக வெளிப்படுத்துகிறவன் நான் தானே, அதனால் பார்க்கிற ரசிகர்கள் அவர்கள் மூவரையும் மறந்து என் நடிப்பை மட்டும் தானே பார்ப்பார்கள். அதனால் எனக்கு ஒன்றும் கவலை இல்லை என சொன்னாராம்” இந்த செய்தி இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…
ஆர் ஜே…
Pushpa 2:…
சமீபத்தில் தனுஷ்,…