சிவாஜிக்கு ஆட்டம் காட்டிய எம்ஜிஆர்!.. இது செம மேட்டரு!..

by Rohini |   ( Updated:2023-05-12 15:37:50  )
mgr sivaji
X

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இரு பெரும் துருவங்களாக இருந்து கோலிவுட்டையே ஆட்சி செய்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி. அண்ணே அண்ணே என எம்ஜிஆரை சிவாஜி அழைப்பதும், சிவாஜிக்காக எந்த ஒரு நிலையிலும் உதவுவதும் இருவருக்கும் இடையே நெருக்கம் அனைவருக்கும் ஒரு உதாரணமாக அமைந்தது. தொழில் முனையில் இருவருக்கும் போட்டிகள் இருந்தாலும் மனதளவில் இருவரும் நட்புடனே உறவாடிக் கொண்டு வந்தனர்.

இவர்களைப் பற்றி நாள்தோறும் ஏதாவது ஒரு வகையில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த அளவுக்கு இருவரின் பெருமையும் புகழும் ஓங்கி நிற்கின்றது. இருவரும் அரசியலிலும் காலடி பதித்தனர். ஆனால் எம்ஜிஆர் அளவுக்கு சிவாஜியால் அரசியலில் ஜெயிக்க முடியவில்லை.

sivaji1

sivaji1

இந்த நிலையில் எம்ஜிஆர் சிவாஜி ஆகியவர்களின் ரசிகர்களைப் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகின்றது. ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அஜித் விஜய் ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு போட்டி இருக்கின்றதோ அதே அளவுக்கு சிவாஜி எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் போட்டிகள் இருந்தன.

ஒரு சமயம் பரணி ஸ்டூடியோவில் படப்பிடிப்பின் ஒரு காட்சியை முடித்துவிட்டு அடுத்த காட்சிக்காக சிவாஜியும் இயக்குனர் ஸ்ரீதரும் காத்துக் கொண்டிருந்தார்களாம். லைட் செட்டப் எல்லாம் மாற்றிக்கொண்டு இருந்தார்களாம். அந்த நிலையில் ஒரு பெருங்கூட்டம் சிவாஜியை நோக்கி படையெடுத்து வந்தார்களாம்.

இளைஞர்கள் படைசூல அந்தக் கூட்டத்தின் நடுவே எம்ஜிஆரும் வந்து கொண்டிருந்தாராம். அப்போது சிவாஜிக்கும் ஸ்ரீதருக்கும் ஏன் இவ்வளவு கூட்டம் வருகிறது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்க எம்ஜிஆர் அருகில் வந்ததும் சிவாஜி எம்ஜிஆரிடம் "அண்ணே என்ன ஆயிற்று ?"எனக் கேட்டாராம்.

sivaji2

sivaji2

அதற்கு எம்ஜிஆர் காலையில் போகும்போதும் சிவாஜியை பார்க்க வேண்டும் என இந்த கூட்டம் இருந்தனர். இப்பொழுது வரும்போதும் அதே கூட்டம் சிவாஜிக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அதனால் வாருங்கள் நான் அழைத்துக் கொண்டு போகிறேன் என இங்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டேன் என சொல்லிவிட்டு நான் வரட்டுமா என எம்.ஜி.ஆர் கிளம்பி விட்டாராம். சற்று நேரத்தில் அந்தக் கூட்டமும் கிளம்பி போக சிவாஜி ஸ்ரீதரிடம் கொஞ்சம் நக்கலாக சிரித்துக் கொண்டே" எனக்காக காத்துக் கொண்டிருந்த இந்த ரசிகர்கள் இனிமேல் எம்ஜிஆரின் ரசிகர்களாக மாறிவிடுவர்" எனக் கூறி நகைத்தாராம்.

Next Story